’மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்’ இலங்கையில் அதிர்ச்சி

 

’மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்’ இலங்கையில் அதிர்ச்சி

கொரோனா நோய்த் தொற்றை சாமர்த்தியமாகக் கையாண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. தொடக்கம் முதலே ஊரடங்கை அறிவித்து, நோயாளிகளைக் கண்டறிந்தது. அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தது. அதனால் அங்கு நோய்த் தொற்று கட்டுக்குள் இருந்துவருகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து சென்ற வாரம் 200 மாணவர்களுக்கு அதிகம் இல்லாத பள்ளிகளைத் திறந்தது. ஆயினும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் குறித்து வைத்து போதை கும்பல் சுற்றுவதாக அந்நாட்டு காவல் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

’மாணவர்களை குறி வைக்கும் போதை கும்பல்’ இலங்கையில் அதிர்ச்சி

 

இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரில் படிக்கும் மாணவர்களிடம் போதை பொருள் புழங்குவதாகச் சொல்கிறது காவல்துறை.

ஆஸ்துமா நோய்க்குப் பயன்படுத்தும் இன்ஹேலர்களில் போதை மருந்து நிரப்பி மாணவகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு இன்ஹேலரின் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் 15,000 வரை விற்கப்படுகிறதாம். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றிய விழிப்புணர்வோடு கவனித்துக்கொள்ள காவல் துறை கேட்டுள்ளது. இந்த விஷயம் பற்றி தொடர்புகொள்ள தொலைப்பேசி எண்ணையும் காவல் துறை அளித்துள்ளது.

இன்ஹேலரில் போதை பொருள் எனும் நூதன பரிமாற்றம் வழியாக மாணவர்களைக் குறிவைத்திருப்பது இலங்கையில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.