மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்!

 

மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்!

வேலை, கடன் பிரச்னை, குடும்பம், உடல் நலம் என பல பிரச்னைகள் ஒவ்வொருவரையும் போட்டு வாட்டி வதைக்கிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் கூட மனப் பதற்றம் பிரச்னை உள்ளது. நமக்கு மட்டும்தான் மனப் பதற்றம் பிரச்னை உள்ளது என்று கருத வேண்டாம். ஒவ்வொருவருக்கும் இந்த பிரச்னை உள்ளதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் பற்றி இங்கே காண்போம்…

மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்!

1. தினமும் யோகா, தியானம் செய்யலாம். பிடித்த இசையைக் கேட்பதும் கூட ஒரு வகையான தியானம் தான். யோகா, உடற்பயிற்சி, இசை, ஓவியம் என எது உங்கள் மனதை அமைதிபடுத்தும் என்பதை கண்டறிந்து அதை தொடர்ந்து செய்யுங்கள்.

2. சரிவிகித ஊட்டச்சத்து உணவை உட்கொள்ள வேண்டும். பதற்றம், மன அழுத்தம் காரணமாக பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு உணவைத் தவிர்ப்பதுதான். சிலர் அதிகப்படியான உணவை உட்கொள்வதும் உண்டு. இந்த இரண்டுமே தவறானது. சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

3. சரியான தூக்கம் மன அழுத்தத்தைப் போக்கும் சிறந்த மருந்து. ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கமின்மை பிரச்னை உள்ளது என்றால், சுகமான தூக்கத்துக்கான வழிகள் பற்றிய நம்முடைய கட்டுரையைப் படித்து, அதன் படி முயற்சி செய்யுங்கள். தேவை எனில் மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்!

4. தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருங்கள். அது உங்கள் உடலை ஃபிட்டாவை வைத்திருப்பதுடன் மனக் கவலை உள்ளிட்டவற்றை நீக்கவும் உதவும்.

5. சற்று நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். மனம் அமைதி அடையும். கோபம், பதற்றம் வந்தால் 10ல் இருந்து அல்லது 20ல் இருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணுங்கள்.

6. அனைத்துக்கும் மேலாக நம்முடைய கவலை, பதற்றத்தால் எதையும் செய்துவிட முடியாது என்பதை உணருங்கள். இந்த கவலை, பதற்றம் நமக்கு தேவைதானா என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

7. மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வழி காணுங்கள். வடிவேலு காமெடி, மிஸ்டர் பீன் காமெடி என உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சற்று நேரம் பார்த்து வாய்விட்டு சிரித்திருங்கள். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழியே இருக்கிறது.

மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்!

8. எப்போதும் மூடி டைப் போல வாய் மூடி மவுனியாக இருந்துவிட வேண்டாம். குடும்பத்தில் பொியவர்கள், துணைவர், நண்பர் என யாரிடமாவது மனதில் உள்ளதை பகிர்ந்திடுங்கள். அவர்களால் உங்களுக்கு உதவிகள் செய்ய முடியலாம். இல்லை என்றால் குறைந்தபட்சம் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்றால் அந்த உதவியையாவது அவர்கள் செய்வார்கள்.