ஈரோடு – ஓட்டுனர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

 

ஈரோடு – ஓட்டுனர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஈரோட்டில் தொடங்கப்பட்ட ஓட்டுநர் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொரோனாவால் அமல்படுத்த ஊரடங்கால் கார், வேன் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விவாதிக்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றவும் ஈரோடு மாவட்டம் சோலாரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் வாகன வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் லைசன்ஸ் பெறுவதற்கு 8ம் வகுப்பு சான்றிதழ் கேட்பதை கைவிட வேண்டும் என்றும் சுற்றுலா வாகனங்களில் அதிக இருக்கைக்கு அனுமதி தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு – ஓட்டுனர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மேலும், சொந்த வாகனங்களை வாடகைக்கு விட அனுமதிக்க கூடாது என்றும் வாகன விபத்துகளை ஒரே வாய்தாவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கொரோனாவால் உயிரிழந்த வாகன ஓட்டிகளுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.