”இனி புது கார் ஓட்ட – அதை வாங்கணும்னு அவசியமில்ல””மாத வாடகைக்கு புதிய கார்”- மாருதி அதிரடி!-

”இனி புது கார் ஓட்ட – அதை வாங்கணும்னு அவசியமில்ல””மாத வாடகைக்கு புதிய கார்”- மாருதி அதிரடி!-

இனி புதிய காரை ஓட்ட அதை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. மாதாந்திர வாடகைக்கு புதிய கார் அளிக்கும் திட்டத்தை மாருதி நிறுவனம் தொடங்கி உள்ளது.

”இனி புது கார் ஓட்ட – அதை வாங்கணும்னு அவசியமில்ல””மாத வாடகைக்கு புதிய கார்”- மாருதி அதிரடி!-

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு புதிய காரை வாங்கி, அதற்கு ஆயிரக்கணக்கில் மாதாந்திர இஎம்ஐ செலுத்துவதுடன், அதற்கு பராமரிப்பு செலவு, வாகன காப்பீடு, பயணத்தின் போது பழுதாகினால் செலவு என பல ஆயிரங்களை இழக்கும் நபர்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மாருதி. ஒரே மாத வாடகையில் காரை சொந்தமாக்கிக்கொள்ளாமலே ”சொந்தமாக” வைத்துக்கொள்ளும் ஒரு புதிய திட்டத்தை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது 12 முதல் 48 மாதங்களுக்கு மாருதி நிறுவனத்தின் புதிய கார் ஒன்றை நீங்கள் மாத சந்தா திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு குறிப்பிட்ட மாதாந்திர வாடகை செலுத்தினால் போதும். வாகன காப்பீடு, பராமரிப்பு செலவு என அனைத்தையும் மாருதி நிறுவனமே ஏற்கும். மேலும் பயணத்தின் போது பழுது ஏற்பட்டால் 24 மணிநேர இலவச சேவையையும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பெற முடியும் என தெரிகிறது.

”இனி புது கார் ஓட்ட – அதை வாங்கணும்னு அவசியமில்ல””மாத வாடகைக்கு புதிய கார்”- மாருதி அதிரடி!-

உதாரணமாக டெல்லியில் மாருதி ஸ்விப்ட் எல்எக்ஸ்ஐ காரை 48 மாத சந்தா ஒப்பந்தத்தின் படி, வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்கள் 14,463 ரூபாய் (அனைத்தும் சேர்த்து) செலுத்தும்படி இருக்கும் என தெரிகிறது. இந்த ஒரு மாத வாடகை மூலம், கார் பராமரிப்பு, காப்பீடு கட்டணம், பயணத்தின் போது ஏற்படும் பழுதுக்கு உதவி என சகல பயன்களையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தா ஒப்பந்த காலம் முடிந்த பின், வாடிக்கையாளர்கள் அந்த சந்தா காலத்தை நீட்டிக்கலாம் அல்லது வேறு காரை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதே காரை அன்றைய சந்தை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் என தெரிகிறது. இந்த புதிய வாடகை சேவை திட்டத்திற்காக, ஒரிக்ஸ் என்ற வாகன உள்கட்டமைப்பு சேவை நிறுவனத்துடன் மாருதி கூட்டு சேர்ந்துள்ளது.

”இனி புது கார் ஓட்ட – அதை வாங்கணும்னு அவசியமில்ல””மாத வாடகைக்கு புதிய கார்”- மாருதி அதிரடி!-

தற்போதைக்கு டெல்லி, மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாருதி நிறுவனம், அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட 60 நகரங்களில், இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்