ஒயின் குடித்தால் ” கன்னாபின்னான்னு துடிக்கும் ஹார்ட்பீட் “… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

ஒயின் குடித்தால்  ” கன்னாபின்னான்னு துடிக்கும் ஹார்ட்பீட் “… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பதால் இதயநோய் பாதிப்பு குறையுமா?ஆல்கஹால் குடிப்பதன் மூலம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று நாம் அனைவரும் அறிவோம். சமீபத்தில் வெளிவந்த ஆய்வில் நாம் பல நாட்களாக நம்பும் விஷயங்களுக்கு நேர்மாறாக சில தகவல்கள் தெரியவந்துள்ளது. தினமும் ஆல்கஹாலை மீடியமாக குடிப்பவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். அதற்கு ஒருவரைமுறையே இருக்காது.

ஒயின் குடித்தால்  ” கன்னாபின்னான்னு துடிக்கும் ஹார்ட்பீட் “… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

தினமும் மது அருந்தாதவர்கள் உடன் மது அருந்துபவர்களை ஒப்பிடுகையில் அருந்துபவர்கள் ஏறக்குறைய 14 ஆண்டுகளில் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் எனும் நோயால் பாதிக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால் உடலுக்கு நல்லது என்று இவ்வளவு நாளாக கூறப்பட்டு வந்த கருத்து இப்பொழுது ஆய்வில் பொய் என தெரிய வந்துள்ளது. தினமும் சிறிதளவு ஒயின் குடிப்பதன் மூலம் உடல்நலம் பாதிப்புகள் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

ஒயின் குடித்தால்  ” கன்னாபின்னான்னு துடிக்கும் ஹார்ட்பீட் “… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

ஒயின் குடிப்பதன் மூலம் ஏற்படும் சிறு நன்மைகளை மட்டும் மக்களுக்கு பரிந்துரைக்க கூடாது . அதனால் ஏற்படும் அபாயங்களை சேர்த்து தனியார் நிறுவனங்கள் வெளிப்படுத்த வேண்டும் . இதனால் இதயம் மற்றும் ரத்த நாள நோய்கள் ஏற்படலாம் என ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் மருத்துவ பரிசோதனையின் ஆய்வில் அவர்களின் மெடிகல் ஹிஸ்டரி வாழ்க்கை முறைகள் பற்றிய தகவல்களை பார்த்தபோது, அதில் பங்கேற்றவர்களின் பதிவு செய்த ஒரு லட்சம் நபர்களுக்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அபாயம் இல்லை என நிரூபணமானது.

ஒயின் குடித்தால்  ” கன்னாபின்னான்னு துடிக்கும் ஹார்ட்பீட் “… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஆல்கஹால் உட்கொள்ளும் நபர்களுடன் எந்த பழக்கமும் இல்லாதவர்களை ஒப்பிடும் போது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆபத்து 16 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே . இதயம் மற்றும் பிற பிரச்னைகளை ஏற்படாமலிருக்க மது பழக்கத்தை இன்றே நிறுத்தி விடுங்கள். பலநாள் நம்பப்படுகின்ற ஒன்று தினமும் ஒயின் குடித்தால் உடலுக்கு நல்லது என்பது தான். பெரும்பாலானவர்கள் அதை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆய்வின் முடிவு ஒயின் குடிப்பது மற்றும் அதை பரிந்துரை செய்பவர்கள் இடையே நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. சீரான சாப்பாடு முறை மற்றும் உடற்பயிற்சி இதை கடைபிடித்தாலே உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. சமீபத்தில் லே பத்திரிகை வெளியிட்ட செய்தியில், இதயத்தை பாதுகாக்க ‘ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஒயின்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு அதை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.