காபி குடிப்பது நல்லதா… கெட்டதா?

 

காபி குடிப்பது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கும் அன்றைய நாளே விடியாது! காபி குடிப்பது உடல்நலனுக்கு கேடு என்று பொதுவாக சொல்லப்படுகிறது. காபியில் உள்ள காஃபின் என்ற வேதிப் பொருள் கெடுதல் என்கின்றனர். அதே நேரத்தில் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி புத்துணர்வு அளிக்கும் சக்தி இந்த காஃபீனுக்கு உண்டு.

காபி குடிப்பது கெடுதலா, எந்த அளவுக்கு காபி குடிக்கலாம் என அறிவியல் கூறுகிறது என்று பார்த்தோம்.

காபி குடிப்பது நல்லதா… கெட்டதா?

காபி குடிப்பதில் நன்மையும் உள்ளது கெடுதலும் உள்ளது என்கின்றனர் உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள். காபி (பால் கலக்காமல்) குடித்து வந்தால் பார்க்கின்சன் நோய், டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், கல்லீரல் புற்றுநோய், இதய ரத்தக் குழாய் அடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு குறையுமாம்.

அதே நேரத்தில் காபியில் உள்ள சில ரசாயனம் உடலின் ரத்த ஓட்டத்தைத் தற்காலிகமாக அதிகரிக்கச் செய்யும். இதற்குக் காரணம் காஃபின்தான். எனவே, கர்ப்பிணிகள், குழந்தைப்பேற்றுக்கு முயற்சி செய்பவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் காபி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காபியில் பேஃபஸ்டால் என்ற கொழுப்பைக் கரைக்கும் மூலக்கூறுகள் உள்ளன. எனவே, காபி குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்.

காபின் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி புத்துணர்வை அளிக்கிறது. மூளையில் என்டார்ஃபின் என்ற ரசாயனம் சுரப்பதன் மூலம் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.

இதைப் படிச்சீங்களா: கூழாங்கற்கள் மீது நடைபயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?

காபியில் ரிபோஃபிளேவின் (பி2), வைட்டமின் பி5, நியாசின் (பி3), மக்னீஷியம், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.

எனவே, ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு கப்களுக்கு மேல் காபி அருந்த வேண்டாம்.

டிகாஷன் போட்ட காபி எடுத்துக்கொள்ளலாம். உடனடி (இன்ஸ்டன்ட்) காபி தவிர்ப்பது நல்லது.

காபியில் கூடுதல் சுவைக்காக சிக்கரி சேர்க்கப்படுகிறது. சிக்கரி அளவு 20 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

காபி கெடுதல் என்று நினைத்து ஒரே நாளில் விட முயல வேண்டாம். தினமும் காபி குடித்து, அதன் மூலமாக மூளையில் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் தூண்டப்பட்டு வந்திருக்கும். திடீரென்று அது தடைபடுவதால் தலைவலி போன்ற பாதிப்பு வரலாம்.

காபி குடிப்பதற்கு பதில் கிரீன் டீ உள்ளிட்ட ஆரோக்கியம் மிக்க பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.