ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி!

 

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் இம்மாதம் ரம்ஜான் பெருநாள் வருவதால், சிறப்புத் தொழுகையை வீடுகளிலேயே செய்வது போல ரம்ஜான் பண்டிகையையும் வீட்டிலேயே தொழுகையை நடத்தலாம் என்றும் இந்த நன்னாளில் வாழ்த்துக் கூறவேண்டி யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி!

மேலும், தமிழகத்தில் நேற்று பிறை தென்படாததால் ரமலான் திங்கட்கிழமை கொண்டாடப்படும் என அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார். அதன் படி, நாளை இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அதனால் வேலூரில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மட்டும் அனைத்து ஜவுளிக்கடைகளையும் திறக்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும் இன்றும் நாளையும் மட்டும் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள ஆட்சியர், கடைகளில் ஏ.சி பயன்படுத்தக் கூடாது என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.