ட்ரீம் 11 நிறுவனமே ஐபிஎல் 2020 -ன் ஸ்பான்ஸர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

ட்ரீம் 11 நிறுவனமே ஐபிஎல் 2020 -ன் ஸ்பான்ஸர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கேளிக்கை கொண்டாட்டம் என்றாலே பணமும் அங்கு விளையாடும். ஐபிஎல் போட்டிகளில் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் ஸ்பான்ஸர்ஸ்தான்.

ரசிகர்கள் மைதானத்திற்குள் வர எடுக்கு டிக்கெட் தொகை எல்லாம் இதில் செலவழிக்கும் பணத்தில் மிகச் சொற்பமே. அதனால் விளம்பரதாரர்கள் இல்லாது இந்தப் போட்டிகள் இல்லை.

ட்ரீம் 11 நிறுவனமே ஐபிஎல் 2020 -ன் ஸ்பான்ஸர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போட்டியின் விறுவிறுப்பு கூடகூட விளம்பரதாரர்களின் வருகையை அதிகரித்தது. கடந்த ஆண்டு ஐபிஎல்ன் டைட்டில் ஸ்பான்ஸர் விவோ.

ஆனால், சமீபகாலமாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கடும் உரசல் இருக்கிறது. எல்லையில் அத்துமீறியதாக நாடு முழுக்க விவாதம் நடந்தது. அதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக விவோ நீடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் டைட்டில் ஸ்பான்ஸரிலிருந்து விவோ நிறுவனம் விலகியது. அது தானாகவே விலகிக்கொண்டது என்றாலும் இந்த அழுத்தமே முக்கியக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

ட்ரீம் 11 நிறுவனமே ஐபிஎல் 2020 -ன் ஸ்பான்ஸர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விவோ விலகியதால் ஐபிஎல்ன் அடுத்த டைட்டில் ஸ்பான்ஸர் யார் என்ற கேள்வி எழுந்தது. போட்டிகள் தொடங்க இன்னும் மிகக் குறுகிய காலமே இருப்பதால் பெரும் தொகை கொடுக்க யார் முன்வருவார்கள் என்ற யோசனையும் இருந்தது.

சென்ற ஆண்டில் டைட்டில் ஸ்பான்ஸரக இருந்த விவோ பிசிசிஐக்கு 440 கோடி ரூபாய் கொடுத்தது. ஆனால், இந்த ஆண்டு 300 கோடி ரூபாய் கொடுத்தால் போதும் என்று பிசிசிஐ அறிவித்தது.

பிசிசிஐ விண்ணப்பிக்க அறிவித்ததும் பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருக்கிறார்களாம். ஏனெனில் ஐபிஎல் பார்வையாளர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதனால் தங்கள் நிருவனம் தயாரிக்கும் பொருள்களை எளிதில் எல்லோரிடமும் கொண்டு சேர்த்து விட முடியும் என நினைக்கிறார்கள்.

ட்ரீம் 11 நிறுவனமே ஐபிஎல் 2020 -ன் ஸ்பான்ஸர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதஞ்சலி, டாடா குரூப்ஸ், ரிலையன்ஸ் (ஜியோ), பைஜூஸ், உன் அகாடமி உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் போட்டிக்களத்தில் அணிவகுத்து நின்றனர்.

ஆனால், ட்ரீம் 11 அணி டைட்டில் ஸ்பான்ஸர் வாய்ப்ப்பைத் தட்டிச்சென்றது. இதற்கான அந்த நிறுவனம் 222 கோடி ரூபாய் வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனை ஐபில் சேர்மன் பிரிஜேஷ் படேல் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இன்று, பிசிசிஐ சார்ப்பில் அதிகாரப்பூர்வமாக ட்ரீம் 11 நிறுவனம் ஐபில் போட்டியில் டைட்டில் ஸ்பான்ஸராக அறிவிக்கபட்டிருக்கிறது. இதன்மூலம் ட்ரீம் 11 நிறுவனம் 4 மாதங்கள் ஐபில் 2020 போட்டியின் விளம்பரதாரராக இருக்கும்.