‘நீட் தேர்வை ரத்து செய்’ திராவிட மாணவர் கழகம் போராட்டம்

 

‘நீட் தேர்வை ரத்து செய்’ திராவிட மாணவர் கழகம் போராட்டம்

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான ‘நீட்’ டை எதிர்த்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட ஓரிரு கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தே வருகின்றன. நீட் தேர்வை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார் அரியலூரைச் சேர்ந்த அனிதா எனும் மாணவி. அவர் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தார். நீட் தேர்வு இல்லையெனில் அவர் எடுத்திருந்த மதிப்பெண்ணுக்கு மருத்துவப் படிப்புக்கு சீட் கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வு எழுதியதில் தோல்வி அடைந்தார். அதனால் அனிதா தற்கொலை செய்துகொண்டார். அது தமிழகத்தில் நீட் குறித்து பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால், நீதிமன்றம் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று தீர்ப்பு சொன்னதும் தமிழகத்திலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

‘நீட் தேர்வை ரத்து செய்’ திராவிட மாணவர் கழகம் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும்தமிழகமெங்கும் திராவிட மாணவர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

‘நீட் தேர்வை ரத்து செய்’ திராவிட மாணவர் கழகம் போராட்டம்

சமூகநீதிக்கான ஐந்து அம்சங்களை வலியுறுத்தி அறப்போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவிப்பின்படி, இன்று (15-7-2020)   தமிழகம் முழுவதும் திராவிட மாணவர் கழத்தின் சார்பில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது. சென்னை வேப்பேரி பெரியார் திடல் நுழைவு வாயில் முன்பு திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமை தாங்கினர்.

‘நீட் தேர்வை ரத்து செய்’ திராவிட மாணவர் கழகம் போராட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்க! சுகாதார, மருத்துவ உதவி ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு அளிப்பதை அடிப்படை உரிமை ஆக்குக! ‘தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தருக! மத்தியத் தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டைத் தாமதிக்காதே! மருத்துவக் கல்லூரி இடங்களை மத்திய அரசின் தொகுப்புக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை! ஆகிய சமூகநீதிக்கான அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி சமூக நீதிக்கான அறப்போராட்டம் முழக்கங்கள் எழுப்பட்டன. இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு தனி நபர் இடைவெளிவிட்டு பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.