“மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்” – முதல்வர் பழனிசாமி

 

“மருத்துவர்  சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்” – முதல்வர் பழனிசாமி

மறைந்த மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

“மருத்துவர்  சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்” – முதல்வர் பழனிசாமி

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மூச்சு திணறலால் அவர் உயிர் பிரிந்தது.தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, மு.க. ஸ்டாலின், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“மருத்துவர்  சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்” – முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும் உலகப் புகழ்பெற்ற புற்று நோய் நிபுணருமான மருத்துவர் சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மருத்துவர் சாந்தா மறைவு மருத்துவத்துறைக்கும் , தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு. இந்த சூழலில், மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தன்னலமற்ற சேவையை கௌரவிக்க, சாந்தா புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவல்துறை மரியாதை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.