கொரோனா காலத்தில் லாபத்தை அள்ளிய டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ்…. ஒரே காலாண்டில் ரூ.764 கோடி லாபம்..

கொரோனா காலத்தில் லாபத்தை அள்ளிய டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ்…. ஒரே காலாண்டில் ரூ.764 கோடி  லாபம்..

மருந்து துறையை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டுக்கான (2020 ஜனவரி-மார்ச்) தனது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் ரூ.764 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 76 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.434 கோடியாக இருந்தது.

கொரோனா காலத்தில் லாபத்தை அள்ளிய டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ்…. ஒரே காலாண்டில் ரூ.764 கோடி  லாபம்..

2020 மார்ச் காலாண்டில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.4,432 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.4,017 கோடியாக இருந்தது.

கொரோனா காலத்தில் லாபத்தை அள்ளிய டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ்…. ஒரே காலாண்டில் ரூ.764 கோடி  லாபம்..

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற 2019-20ம் நிதியாண்டில், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் 4 சதவீதம் அதிகரித்து ரூ.1,950 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் சென்ற நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ.17,460 கோடியாக உயர்ந்துள்ளது.