• February
    17
    Monday

Main Area

Main



குறைந்து வரும் பத்ம விருது பெறுபவர்கள் எண்ணிக்கை... ராமதாஸ் வேதனை!

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் பத்ம விருது பெறுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பத்ம விருது பெற்றவர்களுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட மூன்று ட்வீட்கள்...

"தமிழ்நாட்டிலிருந்து 7 பேருக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்த ஐ,.ஐ.டி. பேராசிரியர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது.  அடுத்த ஆண்டிலாவது அதிக விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து பத்மபூஷன் விருது பெறும் தொழிலதிபர் வேணு சீனிவாசன், பத்மஸ்ரீ விருது பெறும் பாம்பே சகோதரிகள், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையாற்றும் சுந்தரம் ராமகிருஷ்ணன்,  நாதஸ்வரக் கலைஞர்கள் கலீஷாபி & ஷேக் முகமது  ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள், 16 பேருக்கு பத்மபூஷன் விருதுகள், 141 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.