மத்திய அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு!

 

மத்திய அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு!

இந்தியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவுக்கு ஐ.நா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுக்க கொரோனா பீதியில் இருக்கும்போது, மத்திய அரசு நிலக்கரி ஏற்றுமதியில் முதலிடத்தைப் பிடிக்க நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க உள்ளதாக அறிவித்தது. நாடே கொரோனா ஆபத்தில் இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்காமல், நிலக்கரி சுரங்கம் தேவையா என்ற வகையில் ஐ.நா கேள்வி எழுப்பியது.

மத்திய அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு!

இந்த நிலையில் இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட ட்வீடில், “இந்தியாவில் 500 புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முடிவை ஐ.நா. கடுமையாக விமர்சித்திருக்கிறது. புதிய நிலக்கரி சுரங்கங்கள் சுற்றுச்சூழலைக் கடுமையாக பாதிக்கும்; புவி வெப்ப மயமாதலை விரைவு படுத்தும். ஆகவே, அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் தொலைக்காட்சி ஒளிப்பட கலைஞர் மறைவு தொடர்பாக வெளியிட்ட மற்றொரு ட்வீடில், “மக்கள் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன் கொரோனா வைரஸ் தாக்குதலால் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.
கொரோனா காலத்தில் ஊடகத்துறையின் களப்பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஊடகத்துறை உயிரிழப்பு வேல்முருகனோடு முடியட்டும். ஊடகத்துறையினர் அனைவரும் இரு மடங்கு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்!” என்று கூறியுள்ளார்.