மருத்துவர்கள் எச்சரிக்கை…. இந்திய குடியரசு தின விழாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வருவது சந்தேகம்…

 

மருத்துவர்கள் எச்சரிக்கை…. இந்திய குடியரசு தின விழாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வருவது சந்தேகம்…

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் (ஜனவரி 26) நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதை உறுதி செய்தார். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மருத்துவர்கள் எச்சரிக்கை…. இந்திய குடியரசு தின விழாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வருவது சந்தேகம்…
இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பு (கோப்புப்படம்)

இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால், இந்தியா உள்பட சுமார் 40 நாடுகள் அந்நாட்டுடான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனை உறுதி செய்வதுபோல், இந்திய குடியரசு தின விழாவில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று அந்நாட்டு மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் எச்சரிக்கை…. இந்திய குடியரசு தின விழாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வருவது சந்தேகம்…
சாந்த் நாக்பால்

பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் கவுன்சிலின் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் இது தொடர்பாக கூறுகையில், இந்தியாவில் ஜனவரியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் செல்லக் கூடாது என்று தெரிவித்தார். அதேசமயம் இங்கிலாந்து அரசு இதுவரை இது தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆக, ஜனவரி 26ம் தேதியன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வது சந்தேகம்தான். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கொரோனா பாதித்து அதிலிருந்து குணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.