‘அம்பேத்க‌ர் சிலைக்கு மாலை’ ‌ பாஜகவின‌ர் விரட்டியடிப்பு!

 

‘அம்பேத்க‌ர் சிலைக்கு மாலை’ ‌ பாஜகவின‌ர் விரட்டியடிப்பு!

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை அடித்து துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அம்பேத்க‌ர் சிலைக்கு மாலை’ ‌ பாஜகவின‌ர் விரட்டியடிப்பு!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். இறக்கும் காலம் வரை சமூக நீதிக்கு குரல் கொடுத்தவர் இவர் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறார். 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்த இவர் பொருளாதாரம், நீதித் துறை, அரசியல் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தார். தனது 65ஆவது 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி வயதில் அம்பேத்கர் மறைந்தார்.ஆனாலும் அவர் புகழும், கொள்கையும் இன்னும் நாடெங்கிலும் ஒலித்து கொண்டே இருக்கிறது.

‘அம்பேத்க‌ர் சிலைக்கு மாலை’ ‌ பாஜகவின‌ர் விரட்டியடிப்பு!

இந்நிலையில் ம‌துரை அவுட் போஸ்ட் ப‌குதியில் உள்ள‌ அம்பேத்க‌ர் சிலைக்கு மாலை அணிவிக்க‌ வ‌ந்த‌ பாஜகவின‌ரை க‌ண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அண்ணல் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க கூடாது என பாஜகவினர் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த புறநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக தொண்டர்களுடன் வந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவினருக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டதுடன் அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டதால் போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.