துபாயில் டிபிஎல் கிரிக்கெட்- அரசின் உதவியை எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளி வீரர்!

 

துபாயில் டிபிஎல் கிரிக்கெட்- அரசின் உதவியை எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளி வீரர்!

துபாயில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான டிபிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள தமிழக அரசு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

துபாயில் டிபிஎல் கிரிக்கெட்- அரசின் உதவியை எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளி வீரர்!

பொள்ளாச்சி அருகே உள்ளது மாமரத்து பட்டி கிராமம். பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இருக்கும் இந்த கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறார் மாற்றுத் திறனாளி இளைஞர் சீனிவாசன்.(28). இவர் சிறுவனாக இருக்கும்போதே தாய்,தந்தையை இழந்த நிலையில், இவரையும், இவரது சகோதரர் சுரேஷையும் பாட்டி ரங்கம்மாள் கூலி வேலைக்கு சென்று படிக்க வைத்துள்ளார். பாட்டியின் உழைப்பில் சீனிவாசன் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

சிறு வயது முதலே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட அவர், பள்ளி,கல்லூரிகளில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளை வாங்கி இருக்கிறார். தற்போது தமிழக மாற்றுத்திறனாளி அணியில் விளையாடி வருகிறார். தமிழக அணிக்காக தேசிய அளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். இதுவரை 100 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் சீனிவாசன் பங்கேற்றுள்ளார்.

துபாயில் டிபிஎல் கிரிக்கெட்- அரசின் உதவியை எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளி வீரர்!

இந்த நிலையில், அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்காக டிபிஎல் போட்டியில் விளையாட சென்னை ஸ்டார்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக துபாய் சென்றுவரும் ஆகும் செலவுக்கு பிறரின் உதவியை எதிர்பார்த்துள்ளார். தமிழக அரசு மற்றும் தனியார் அமைப்பினர் உதவ முன் வந்தால், துபாய் செல்லும் வாய்ப்பு அமையும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். விடா முயற்சியும், திறமையும், தன்னம்பிக்கையும் நிறைந்த, சீனிவாசன் கனவு நனவாகும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.