புதிய நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு 7-ம் இடத்துக்கு இறக்கம்!

 

புதிய நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு 7-ம் இடத்துக்கு இறக்கம்!

கொரோனாவினால் பாதிப்படைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதில் தமிழ்நாட்டில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே சென்றது. இதில் ஒரு மாற்றம் சமீப சில நாட்களாகத் தென்படுகிறது.

இந்தியாவில் இரண்டாம் நாளாக கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 7.5 லட்சத்துக்கும் கீழே குறைந்து வரும் போக்கு நீடிக்கிறது.

புதிய நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு 7-ம் இடத்துக்கு இறக்கம்!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 61,775 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,83,608 பேருக்குத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக தொற்றுப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது 54,044 ஆகத்தான் இருக்கிறது. தேசிய அளவில் உயிரிழப்போர் விகிதம் இன்றைக்கு 1.51% ஆக குறைந்திருக்கிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டோர் உயிரிழப்பு விகிதத்தை 1% கீழே குறைக்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இப்போது 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1%-க்கும் குறைவாக உள்ளது.

புதிய நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு 7-ம் இடத்துக்கு இறக்கம்!

இந்தியா முழுவதும் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை இன்றைக்கு 67,95.103 ஆக இருக்கிறது. தொடர்ந்து தினந்தோறும் அதிகமானோர் குணம் அடைந்துவருவதன் விளைவாக தேசிய அளவில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அது 89% க்கு நெருக்கமாக இருக்கிறது.(88.81%)

அதிக குணம் அடைந்த நோயாளிகள் எண்ணிக்கை மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்திலும், மகாராஷ்டிரா இடம் இடத்திலும், கேரளா மூன்றாம் இடத்திலும், ஆந்திரா நான்காம் இடத்திலும் தமிழ்நாடு ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

புதிய நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு 7-ம் இடத்துக்கு இறக்கம்!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 8000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா இரண்டு மாநிலங்களிலும் 6000-த்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு ஏழாம் இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 4, 5 வது இடங்களில் இருந்த தமிழகம் தற்போது கீழே இறங்கியிருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியே.

புதிய நோயாளிகள் பட்டியலில் தமிழ்நாடு 7-ம் இடத்துக்கு இறக்கம்!

கடந்த 24 மணி நேரத்தில் 717 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 82% இறப்புகள் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 213 பேர் உயிரிழந்துள்ளனர். இது 29 % ஆகும். கர்நாடகாவில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேரை இழந்து தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது.