என்னது? பிக் பாஸ் சீசன்ல போட்டியாளர்கள் டபுள் பெட் பயன்படுத்தக் கூடாதா!

 

என்னது? பிக் பாஸ் சீசன்ல போட்டியாளர்கள் டபுள் பெட் பயன்படுத்தக் கூடாதா!

ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-14 நிகழ்ச்சியில் டபுள் பெட் பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸும் ஒன்று. பல மொழிகளில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் தொகுத்து வழங்குகின்றனர். அந்த வகையில் ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 13 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், பிக் பாஸ் சீசன்-14க்காக மக்கள் நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.

என்னது? பிக் பாஸ் சீசன்ல போட்டியாளர்கள் டபுள் பெட் பயன்படுத்தக் கூடாதா!

கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பிக் பாஸ் சூட்டிங் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 14ல் டபுள் பெட் கொண்ட கட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. அதாவது, போட்டியாளர்கள் எல்லாரும் தனி கட்டில்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பெட்டில் இரண்டு பேர் தூங்கக்கூடாது என்றும் தட்டு, கண்ணாடி உள்ளிட்ட எந்த பொருட்களையும் பகிர்ந்துக் கொள்ள கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

என்னது? பிக் பாஸ் சீசன்ல போட்டியாளர்கள் டபுள் பெட் பயன்படுத்தக் கூடாதா!

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் வாரத்துக்கு ஒரு முறை போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் தொடங்க உள்ள இந்த பிக் பாஸ் சீசன் 14ல் மோனலிசா, சித்தார்த் சுக்லா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.