”டூடுல்ஸ் வால்பேப்பர் – புதிய கால் பட்டன்”வாட்ஸ் அப் திட்டம்

”டூடுல்ஸ் வால்பேப்பர் – புதிய கால் பட்டன்”வாட்ஸ் அப் திட்டம்

பேன்ஸியான வால்பேப்பர் உள்ளிட்ட பல புதிய வசதிகளை வாட்ஸ்அப்பில் அடுத்து வரும் அப்டேட்களில் எதிர்பார்க்கலாம். இதற்கான சோதனை முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”டூடுல்ஸ் வால்பேப்பர் – புதிய கால் பட்டன்”வாட்ஸ் அப் திட்டம்

வால்பேப்பர்களை கூடுதல் பேன்சியாக மாற்ற வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. டூடுல்ஸ் எனப்படும் வரைபடங்கள் கொண்ட மாறுபட்ட இமேஜ்கள் இதில் அடங்கும் என தெரியவந்துள்ளது. அதேப்போல, வாட்ஸ்அப்பில், வீடியோ மற்றும் ஆடியோ கால்களை அழைக்க தனித்தனியாக பட்டன் இருப்பதை ஒரே பட்டனாக மாற்றவும், வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. இதை கொண்டு நாம் வீடியோ கால் அல்லது சாதாரண அழைப்பு என தேர்ந்தெடுக்கலாம் என தெரிகிறது.

”டூடுல்ஸ் வால்பேப்பர் – புதிய கால் பட்டன்”வாட்ஸ் அப் திட்டம்

மேலும், வாட்ஸ்அப்பில் பிசினஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, பொருட்களுக்கான கேட்டலாக்கை பெற ஷார்ட் கட் அமைப்பதற்கான சோதனை முயற்சியிலும் வாட்ஸ் அப் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.