Home லைப்ஸ்டைல் வழிகாட்டி நீ அழாதே... நான் இருக்கிறேன்!

நீ அழாதே… நான் இருக்கிறேன்!

அன்பு குழந்தையே..

உன்னை பல பேர் ஏமாற்றி இருந்தாலும் அயர்ந்து போகாதே, எத்தனை இழப்புகள் வந்தாலும் சோர்ந்து போகாதே. நீ சந்திக்கும் தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்களை போல இரண்டு மடங்கான வெகுமதிகளை பெற போகிறாய், கலங்காதே நான் இருக்கிறேன்.
வாழ்க்கையில் நீ இன்று கஷ்டப்படுவதை போலத்தான் உலகில் இருக்கிற அனைவரும் ஏதோ ஒருநாள் கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள். அதனால் இந்த உலகத்தில் நீ மட்டும் தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாய் என்ற எண்ணத்தை தூக்கி எறி. துன்பப் படாத மனிதனே கிடையாது. அவரவர் கர்மவினைகளின் படி அதை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும். தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் தண்டனை கிடைக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்.

Why Positivity Breeds Success

உனக்கு நிச்சயம் வெகுமதிகளை அள்ளித் தருவேன். இமைப்பொழுதும் உன்னை விட்டு விலகமாட்டேன். இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும். நீ இழந்தது அனைத்தும் உன் நலனுக்காகவே நடந்தது என்பதை உணர்ந்துகொள். யார் உன்னை வெறுத்தார்களோ, யார் உன்னை உதாசினபடுதினார்களோ, யார் உன் நம்பிகையை கெடுத்தார்களோ. அவர்கள் முன் நீ வளர்ச்சி அடைந்து உன் வாழ்வில் வெற்றி பெற போகிறாய். கவலை படாமல் இரு. நான் இருக்கிறேன், கோபம் வேண்டாம்.

எப்படிபட்ட சூழ்நிலைக்கு தள்ளபட்டாலும் சிறிதும் கலங்காதே. எப்போது என்னை தேடி வந்து நானே சகலமும் என்ற நம்பிக்கையில் உனது வாழ்க்கையை ஒப்படைத்தாயோ அக்கணமே உன் பாவங்கள் மறைந்தது. இனி கலங்காதே எந்த சூழ்நிலையிலும் கை விடமாட்டேன் நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம். உன் சந்தோஷத்திலும் சரி துக்கத்திலும் சரி உன்னுடன் தான் இருப்பேன். உன் வலியை மாற்றுவேன் என் பிள்ளையின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன்.

உன் கண்ணீர் கவலை எல்லாம் முடியப்போகிறது. கூடிய விரைவில் உனக்கான வெற்றி இலக்கு காத்துக்கொண்டு இருக்கிறது. பந்தய கோட்டை எட்டும் தருவாயில் அது உன்னை சோதித்து பார்க்கும்.

Tap Into Your Company's Power of Digital Positivity - Enterprise Irregulars

உன் பலம் என்ன, நம்பிக்கை என்பது எந்த அளவில் இருக்கிறது என்று, அந்த கட்டத்தில் தான் நீ இருக்கிறாய். உன் வாழ்க்கைக்கு பொறுப்பாளி நானே உனக்கான அனைத்தையும் நான் உன்னிடம் வந்து சேர்ப்பேன். நீ அழாதே. உனக்கான அனைத்தும் தயாராக உள்ளது. அது மற்ற விஷயங்கள் போல நிலையற்றவை அல்ல. உன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கும் பொக்கிஷம்.
ஏமாற்றம், அவமானம், நிராகரிப்பு என அந்த நொடியை வைத்து உன் வாழ்வின் இலக்கை தீர்மானிக்க வேண்டாம். அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் அற்புதங்களும், அதிசயங்களும் ஏராளமாக இருக்கும். நம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் சாத்தியப்படுத்திவிடும்.
உன்னை நான் சரி செய்வேன். உன்னுடன் எப்போழுதும் நான் இருப்பேன்.

Happiness..' - Home | Facebook
  • வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

வடசென்னையில் 16 செ.மீ மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கும் நிவர் புயல் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை 145 கி.மீ வேகத்தில் காற்று...

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

முருகக் கடவுளை முன்வைத்து கடந்த 20 நாட்களுக்கு மேல் தமிழக பாஜக வேல் யாத்திரையை நடத்தி வருகிறது.திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை திருச்செந்தூரில் முடிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளார். மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி...

பாலியல் குற்றமா… இனி இதுதான் தண்டனை! அதிர வைக்கும் பாகிஸ்தான்

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பாலியல் வழக்குகள் மட்டுமே 33 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதியப்படுகின்றனவாம். கணக்கிட்டுப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு 90 வழக்குகளுக்கும் அதிகம். அப்படியெனில் ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ...
Do NOT follow this link or you will be banned from the site!