அரசியல் பேசக் கூடாது – டி.டிவி. தினகரனுக்கு சின்னம்மா போட்ட உத்தரவு?

 

அரசியல் பேசக் கூடாது – டி.டிவி. தினகரனுக்கு சின்னம்மா போட்ட உத்தரவு?

தேர்தல் நெருங்கி விட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பரபரப்பாகி விட்டார்கள்.கிட்டத்தட்ட பரப்புரைகளும் கூடத் தொடங்கி விட்டனர். கார,சாரமான மோதல்களும் கிளம்பி விட்டன.ஆனால்.கடந்த 3 மாத காலமாகவே அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது வெளியில் தெரியவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே பரம ரகசியமாக இருக்கிறது.சமீபமாக கட்சித் தொண்டர்களையோ, நிர்வாகிகளையோகூட சந்திப்பதில்லை. கேட்டால், சென்னை வீட்டிலிருக்கிறார். புதுச்சேரி பண்ணை வீட்டிலிருக்கிறார். பெங்களூரு போயிருக்கிறார், ஓசூரில் ஒரு இடத்தில் தங்கியிருக்கிறார் என ஆளுக்கொரு தகவல் சொல்கிறார்கள்.

அரசியல் பேசக் கூடாது – டி.டிவி. தினகரனுக்கு சின்னம்மா போட்ட உத்தரவு?


சமீபத்தில் சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லி போன அவர் அ.ம.மு.க. பொருளாளரான வெற்றிவேல் மறைவிற்கு,இரங்கல் தெரிவித்தார். பின்னர் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக ஒரு சில வார்த்தைகள் பேசியதோடு சரி.வழக்கமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தும் அவர் இப்போது “கம்” என்று இருக்கிறார். முன்னதாக தனது ஒரே மகள் ஜெயஹரிணிக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்த டி.டி.வி. தினகரன் அந்த ஏற்பாடுகளில் கூட தற்போது முசியவில்லை. சசிகலா விடுதலையாகட்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கிறார்.

அரசியல் பேசக் கூடாது – டி.டிவி. தினகரனுக்கு சின்னம்மா போட்ட உத்தரவு?


விறு,விறுப்பான தேர்தல் களம் காண வேண்டியவர் ஏன் இப்படி இருக்கிறார்? காரணம் சின்னம்மா போட்ட உத்தரவு என்கிறார்கள்.” நான் சிறையில் இருந்து வெளியில் வரும் வரை அரசியலில் யாருடனும் மோத வேண்டாம்.தேர்தல் கூட்டணி பற்றி ஏதும் கருத்து தெரிவிக்க வேண்டாம்.சில திருப்பு முனை ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறேன். அது நடக்கும் வரை அரசியல் பற்றி பெரிதாக எதுவும் பேச வேண்டாம்” எனச் சசிகலா கூறிள்ளாராம்.

அரசியல் பேசக் கூடாது – டி.டிவி. தினகரனுக்கு சின்னம்மா போட்ட உத்தரவு?


சசிகலா ஏற்பாடுகள் செய்து வரும் அந்த திருப்புமுனையில் “அதிமுகவை தனது தலைமையின் கீழ் கொண்டு வந்து அ.ம.மு.கவை அதிமுகவுடன் இணைப்பது” என்ற திட்டமும் இருக்கிறதாம். இதன் நிமித்தமாகவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் டிடிவி தினகரன் குழம்பிய நிலையில் மவுனமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.