“விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை”

 

“விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை”

இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசக்கூடாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை”

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத், “நாடாளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு தடைவிதித்து அதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தன்னால் கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரபாகரன் பல லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த கொலைக்காரன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. தடை செய்யப்பட்டுள்ள அமைப்பை பற்றி உயரிய நாடாளுமன்றத்தில் பேசுவதை அனுமதிக்க முடியாது. அவரை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் நாடாளுமன்ற மாண்பு சீர்குலையும்” எனக் கூறினார்.