பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்காமல் இருப்பதே நல்லது- உயர்நீதிமன்ற கிளை

 

பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்காமல் இருப்பதே நல்லது- உயர்நீதிமன்ற கிளை

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் செய்வதறியாது திகைத்த தமிழக அரசு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு குறித்து கடந்த 9ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியது. அதன்படி கேட்கப்பட்ட கருத்துக்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் பள்ளிகள் திறப்பில் அரசின் நிலைபாடு என்ன என்பது அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்காமல் இருப்பதே நல்லது- உயர்நீதிமன்ற கிளை

இந்நிலையில் தேனியைச் சேர்ந்த ராம்பிரசாத், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பல பள்ளிகள் கொரோனா மையமாக செயல்பட்டுவருவதாகவும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவது நல்லது அல்ல என்றும், பள்ளி கல்லூரிகளில் சமூக இடைவெளியை வாய்ப்பு இல்லை என்பதால் நோய் பரவல் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்காமல் இருப்பதே நல்லது- உயர்நீதிமன்ற கிளை

இந்த மனு மீதான விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது “பக்கத்து மாநிலங்களில் என்ன நடக்கிறது? என்பதை பார்க்க வேண்டும். பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் கருத்தும் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்பதே?. எனவே பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்காமல் இருப்பதே நல்லது” என கருத்த் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தமிழக பள்ளி கல்வி , உயர்கல்வி துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.