• February
    29
    Saturday

Main Area

Main



இன்னைக்கு சாயந்தரம் மிஸ் பண்ணாதீங்க! சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் மந்திரம் இது தான்!

மகா சங்கடஹர சதுர்த்தி
மகா சங்கடஹர சதுர்த்தி

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி கடைபிடிக்கப்படுகிறது. சங்கடம் என்றால் துன்பம் என்பது பொருள். ஹர என்றால் அறுத்தல் எனப் பொருள்படும். சங்கடஹர சதுர்த்தியில் ஆனை முகனை விரதமிருந்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையின் அனைத்து விதமான துன்பங்களையும் விநாயகர் அழிப்பார் என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து.

god

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வருகிற நாலாம் நாள் சங்கடஹர சதுர்த்தி என்றாலும் ஆவணி மாத சுக்லபட்சத்தில் வருகிற சங்கட ஹர சதுர்த்தி  மகாசங்கடஹரசதுர்த்தி. இன்று முதல் தொடர்ந்து வருகிற ஒவ்வொரு சதுர்த்தியிலும் விரதமிருந்து ஆனைமுகனை வழிபட வாழ்வின் துன்பங்களிலிலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
இன்று மாலை அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று,

god

நம் பிரார்த்தனைகளை தீர சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.  இன்று மாலை விநாயகர் ஆலயத்திற்கு சென்று இந்த சதுர்த்தியை வழிபட்டால், வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். அப்படி இன்று சதுர்த்திக்காக ஆலயங்களுக்குச் செல்பவர்கள் மறக்காமல் அப்படியே சந்திர தரிசனத்தையும் பாருங்கள். அப்படி விநாயகரை இன்று வழிபட்டு, வானத்தில் சந்திரனையும் பார்த்து வணங்கி வழிபட்டு, பின் வீட்டிற்கு திரும்பினால், முழு பலன்களும் கிடைக்கும். 
1.ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

2.சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

3.ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

4. அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
கணபதியைக் கைதொழுதக் கால்.

god

5. மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர 
வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே.
என்பன போன்ற விநாயகர் ஸ்லோகங்களை மனதில் பாராயணம் செய்த  படியே ஆலயத்தை 8 முறைகள் வலம் வர வேண்டும்.நம்மால் இயன்ற அளவு இன்றையதினம் தானங்கள் குறைந்தது 5 பேருக்காவது அன்னதானம் செய்திட வேண்டும்.
முறையாக ஆனைமுகனை சதுர்த்தியில் வழிபட்டு வர நம்மை இன்னல்களிலிருந்து விடுவித்து நீடித்த ஆயுள்,நிலையான கல்வி,நன்மக்கட்பேறு என அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளி வழங்கிடுவார்.

2018 TopTamilNews. All rights reserved.