darbar
  • January
    20
    Monday

Main Area

Main



நாளை என்னடைய நண்பர்கள் இந்தியர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை! - டெல்லி ஜாமியா பல்கலை மாணவியின் கதறல்!

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம்
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம்

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகம் ஜனவரி 5ம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் எங்கும் பாதுகாப்பு இல்லை, என்னுடைய நண்பர்கள் நாளை இந்தியர்களாக இருப்பார்களா என்றே தெரியவில்லை என்று ஜாமியா பல்கலைக் கழக மாணவிகள் கதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

delhi college

தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தது. டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் வன்முறை ஏற்படவே, போலீசார் தடியடி நடத்தினர். பல்கலைக் கழகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து கண்ணில் பட்ட மாணவர்களை எல்லாம் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜாமியா பல்கலைக் கழகம் 2020 ஜனவரி 5ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹாஸ்டலிலில் இருந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். வெளியேறும் மாணவிகளிடம் தொலைக்காட்சி நிறுவனங்கள் பேட்டி அளித்தன. அவர்கள் கண்ணீருடன் அளித்த பேட்டியில், "மாணவர்களுக்கு டெல்லி மிகவும் ஏற்ற, பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நினைத்தோம். பல்கலைக் கழகம் உள்ளே யாரும் வர முடியாது என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக நடந்துள்ளது. இரவு முழுவதும் கதறினோம். இந்த நாடு முழுக்க பாதுகாப்பானதாக தெரியவில்லை. எங்கே செல்வது என்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் எல்லாம் நாளை இந்தியர்களாக இருப்பார்களா என்றும் தெரியவில்லை. நான் இஸ்லாமிய பெண் இல்லை. ஆனாலும் முன்னிலைப்படுத்தப்படுகிறேன். எது சரியானதோ அதற்கு ஆதரவாக நிற்கக்கூட முடியாது என்றால் நம்முடைய கல்வியின் பயன் என்ன?" என்று கேட்டுள்ளார்.

delhi protest

பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய போலீசார், 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களை திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி வரை காவலில் வைத்திருந்து பிறகு விடுதலை செய்துள்ளனர். போலீஸ் தரப்பிலோ, "வன்முறையாளர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்து எங்கள் மீது கற்களை வீசியதால் நாங்களும் சென்றோம். வன்முறைக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து வருகிறோம்" என்கின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.