“திமுகவுடன் கூட்டணி வேண்டாம்… தனித்து போட்டியிடலாம்” – காங்கிரஸ் தீர்மானம்!

“திமுகவுடன் கூட்டணி வேண்டாம்… தனித்து போட்டியிடலாம்” – காங்கிரஸ் தீர்மானம்!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு இரு அணிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-திமுக ஒரு அணியாகவும், பாஜக-என்ஆர் காங்கிரஸ்-அதிமுக மற்றொரு அணியாகவும் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன. இங்கே போன்று அங்கேயும் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகவே சென்றது.

“திமுகவுடன் கூட்டணி வேண்டாம்… தனித்து போட்டியிடலாம்” – காங்கிரஸ் தீர்மானம்!

இரு அணிகளிலும் தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாமலேயே இருந்தது. இறுதியில் பாஜக கூட்டணியில் சுமுக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி திமுக 13 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அண்ணா அறிவாலயத்தில் இன்று நாராயணசாமிக்கும் ஸ்டாலினுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

“திமுகவுடன் கூட்டணி வேண்டாம்… தனித்து போட்டியிடலாம்” – காங்கிரஸ் தீர்மானம்!

இச்சூழலில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் இன்று ஒன்று கூடினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். அப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த நாராயணசாமியிடம் அங்கிருந்த நிர்வாகிகள் திமுகவிடம் கூட்டணி வைக்க வேண்டாம் என நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலைக் கொடுத்து வலியுறுத்தவும் செய்தனர்.

“திமுகவுடன் கூட்டணி வேண்டாம்… தனித்து போட்டியிடலாம்” – காங்கிரஸ் தீர்மானம்!

கடந்த முறை காங்கிரஸ் 21 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக 9 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. அதிலும் ஒரு திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் நாராயணசாமியின் ஆட்சியும் கலைந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டே திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.