‘எங்க பிரச்சினைல தலையிடாதீங்க; அப்புறம் கேங் வார் ஆயிடும்’ – பைடனை எச்சரிக்கும் சீனா!

‘எங்க பிரச்சினைல தலையிடாதீங்க; அப்புறம் கேங் வார் ஆயிடும்’ – பைடனை எச்சரிக்கும் சீனா!

உலகின் வல்லரசு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் எப்போதும் யார் பெரியவர்கள் என்று காட்டிக்கொள்ள வார்த்தைப் போரில் முட்டிக்கொள்வார்கள். கொரோனா வைரஸை உருவாக்கியது சீனா தான் என முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமில்லாமல், ஜிங்ஜியாங்கில் உய்குர் இஸ்லாமியர்களை சீனா ஒடுக்குவதாகவும் அமெரிக்கா ஐநாவில் குற்றச்சாட்டை எழுப்பியது.

‘எங்க பிரச்சினைல தலையிடாதீங்க; அப்புறம் கேங் வார் ஆயிடும்’ – பைடனை எச்சரிக்கும் சீனா!

1979இல் தொடங்கப்பட்ட சீன-அமெரிக்க தூதரக உறவு டிரம்ப் ஆட்சிக்காலத்தில் நிலைத்தன்மையை இழந்தது. இரு தரப்பும் முட்டி மோதிக் கொண்டன. குறிப்பாக ஹாங்காங், திபெத், தென் சீனக் கடல் ஆகிய பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டி அமெரிக்கா கருத்து தெரிவித்துவந்தது.

‘எங்க பிரச்சினைல தலையிடாதீங்க; அப்புறம் கேங் வார் ஆயிடும்’ – பைடனை எச்சரிக்கும் சீனா!

இச்சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளிவிவகார அலுவலகத்தின் பணிப்பாளர் யாங் ஜீச்சி, சீன-அமெரிக்க உறவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். அப்போது பேசிய அவர், “உலகில் அமெரிக்காவிற்கு இருக்கும் செல்வாக்கை நாங்கள் குறைக்க விரும்பவில்லை. அமெரிக்காவின் இடத்தைப் பிடிக்கவும் நாங்கள் ஆசைப்படவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் உள்பட எந்த உள்நாட்டு பிரச்சினையிலும் நாங்கள் தலையிடவில்லை. அதேபோல அமெரிக்காவும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது.

‘எங்க பிரச்சினைல தலையிடாதீங்க; அப்புறம் கேங் வார் ஆயிடும்’ – பைடனை எச்சரிக்கும் சீனா!

ஜோ பைடனின் நிர்வாகம் இருதரப்பு வர்த்தகத்தில் தேசியப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமே தவிர, அதை அழித்தொழிக்க நினைக்கக் கூடாது. உலகின் ஒற்றைத் தலைமை, அதிகாரக் குவியல் போன்ற காலாவதியான மனநிலையிலிருந்து அமெரிக்கா வெளிவந்து, எங்களுடன் இணைந்து சரியான முறையில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் என்றும் நம்புகிறோம். அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கையாளமால் இரு தரப்பிற்கும் சாதகமாக ஒத்துழைப்புடன் வர்த்தகத்தை மேற்கொள்வோம்” என்றார்.

‘எங்க பிரச்சினைல தலையிடாதீங்க; அப்புறம் கேங் வார் ஆயிடும்’ – பைடனை எச்சரிக்கும் சீனா!

அவர் பேசுகையில் ‘ஒத்துழைப்பு’ என்ற வார்த்தையை 24 முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரை விட அரசின் செல்வாக்குமிக்க அதிகாரியாக யாங் ஜீச்சி பார்க்கப்படுகிறார். இதனால் அவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீன விவகாரங்களை டிரம்ப் அரசு கையாண்டது போல் பைடனும் கையாளக் கூடாது என்பதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக யாங்கின் பேச்சு அமைந்துள்ளது.