‘இந்தியா செல்ல வேண்டாம்’ அமெரிக்கா எச்சரிக்கை!

 

‘இந்தியா செல்ல வேண்டாம்’ அமெரிக்கா எச்சரிக்கை!

அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

‘இந்தியா செல்ல வேண்டாம்’ அமெரிக்கா எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. உலகளவில் 14.26 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30.42 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் 12.16 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘இந்தியா செல்ல வேண்டாம்’ அமெரிக்கா எச்சரிக்கை!

இதன் மூலம் இந்தியா கொரோனா மொத்த பாதிப்பு 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவிலிருந்து 1,54,761 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,80,530 ஆக உச்சத்தை தொட்டுள்ளது.அத்துடன் இதுவரையோ மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை 12,71,29,113 ஆக அதிகரித்துள்ளது.

‘இந்தியா செல்ல வேண்டாம்’ அமெரிக்கா எச்சரிக்கை!

இந்நிலையில் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்திய நிலையில் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.