புத்தாண்டு இன்று… குல தெய்வத்தை வணங்க மறந்துவிடாதீர்கள்!

 

புத்தாண்டு இன்று… குல தெய்வத்தை வணங்க மறந்துவிடாதீர்கள்!

புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. பலரும் காலையிலேயே கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்திருப்பீர்கள். எத்தனை பேர் தங்களின் குல தெய்வத்தை வணங்கினீர்கள்? இன்றைய நாளில் நம் குலதெய்வத்தை மறக்காமல் வணங்கினால் சகல ஐசுவரியமும் வந்து சேரும்!

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவதைத் தான் சித்திரை வருடப் பிறப்பு என்கிறோம். வருடத்தின் முதல் நாளில் பூஜை அறையைச் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து முக்கனிகளை, தங்கம், வெள்ளி, நாணயம், கண்ணாடி, பூக்கள் வைத்துக் காண்பதன் மூலம் வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

புத்தாண்டு இன்று… குல தெய்வத்தை வணங்க மறந்துவிடாதீர்கள்!

காலையில் எழுந்து குளித்து வாசலில் அரிசி மாவுக் கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பின்னர் வீட்டில் சமைத்து குல தெய்வம் மற்றும் கடவுளுக்கு படையல் செய்து வழிபட வேண்டும். பிறகு குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

குல தெய்வ வழிபாட்டின் மூலம் நம் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கும். நமக்கு என்னதான் இஷ்ட தெய்வம் இருந்தாலும், முதலில் குல தெய்வத்தை தான் வணங்க வேண்டும். அப்படி வணங்குவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் நம்மைத் தேடி வரும்.

சித்திரை வருடப் பிறப்பு அன்று பூஜை செய்வது பஞ்சாங்கம் படிப்பது சிறப்பாக காணப்படுகிறது. பஞ்சாங்கம் இல்லாதவர்கள் கோயிலில் பஞ்சாங்கம் படிப்பார்கள் அதனையாவது கண்டிப்பாக கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும்போது அந்த வருடம் முழுக்க நமக்கு நல்லதே நடக்கும்.

பஞ்சாங்க பூஜையில் முதலில் நம் குலதெய்வத்தை வழிபட்டு விநாயகர், இஷ்ட தெய்வம், எல்லை தெய்வம், காவல் தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபட வேண்டும்.

பின் பெற்றோர்கள், உங்களின் குருவின் பாதங்களை வணங்கி பின்னர் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

புத்தாண்டு தினம் நாம் கொண்டாடுவது மட்டுமல்ல, மற்றவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் விழாவாகும். இன்றைய நாளில் ஏழைகளுக்கு தானம் செய்வது நற்பலன்களை பெற்றுத் தரும். புத்தாடை, உணவு என்று மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

அதே போல் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும்போது பணம் கொடுப்பது முக்கியமாகப் பார்க்கப்படும். தாத்தா, அப்பா, பெரியவர்கள் காலில் விழும்போது அவர்கள் பணம்  கொடுப்பார்கள். இது ஆண்டு முழுவதும் பணவரவு நமக்கு இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.