குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம் செய்துவிடாதீர்கள்

 

குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம்  செய்துவிடாதீர்கள்

குழந்தைகளைப் பிடிக்கும் என்றால் அவர்களின் குறும்புகளைப் பிடிக்கும் என்றே அர்த்தம். அந்தளவுக்கு ஒவ்வொரு நொடியும் குறும்புகளால் நிறைந்த உலகம் அவர்களுடையது.

ஏதேனும் ஒரு சேட்டை செய்து திட்டியிருப்பீர்கள் அல்லது அடித்திருப்பீர்கள். ஆனால், அடுத்த ஐந்து நிமிடத்தில் அதைவிடவும் பெரிய சேட்டையைச் செய்திருப்பார்கள். அது உங்களை அவமானப்படுத்தவோ அலட்சியப்படுத்தவோ அப்படிச் செய்வதில்லை. குழந்தைகளின் இயல்பே அப்படித்தான்.

குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம்  செய்துவிடாதீர்கள்

குழந்தைகளைக் கண்டிக்காமல் பேரண்டிங் இருக்க முடியாது. ஆனால், கண்டிக்கும்போது சில விஷயங்களை மறந்தும் செய்துவிடக்கூடாது. ஏனெனில், இதன் விளைவுகள் உடனே வெளிப்படுமா என்பது தெரியாது ஆனால், குழந்தைகளின் ஆழ்மனத்தில் நன்கு பதிந்துவிடும். அது என்றேனும் ஒருநாள் பூதாகரமாக வெளிப்பட்டு விடும்.

கெட்ட வார்த்தை: இது உங்களுக்கே தெரிந்த விஷயம்தான். பெரியவர்களோடு சண்டை போடும்போது நம்மையும் அறியாமல் கெட்ட வார்த்தைகள் ஏதேனும் வந்துவிடும். அந்தத் தவற்றை குழந்தைகளைக் கண்டிக்கும்போது செய்துவிடாதீர்கள். அது எவ்வளவு பெரிய சேட்டையை அல்லது தவற்றை அக்குழந்தை செய்திருந்தாலும்கூட.

குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம்  செய்துவிடாதீர்கள்

ஒருவேளை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட்விட்டால், முதலில் அதற்கான அர்த்தம் தெரியாமல் சக நண்பர்களிடம் அந்த வார்த்தையைப் பிரயேகப்படுத்தும். அதனால், பள்ளியில், விளையாடும் இடத்தில் பெரியவர்களால் உங்கள் குழந்தைகள் அதட்டப்படலாம். திட்டப்படலாம். அதன்பின், அந்தச் சொல்லின் அர்த்தம் தேடி யாரிடமாது கேட்கும்போது பெரிய விளைவுகளை அது சந்திக்க நேரிடலாம்.

மோசமான சைகை: இதுவும் கெட்ட வார்த்தைக்கு இணையான ஒன்றுதான். கெட்ட வார்த்தையிலாவது அதன் அர்த்தத்தை எப்படியேனும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், நீங்கள் காட்டும் சைகையை எப்படிப் புரிந்துகொள்வது என்பது பெரும் சிக்கலாகி விடும்.

குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம்  செய்துவிடாதீர்கள்

நீங்கள் காட்டுவது போலவே சைகை காட்டத் தெரியாமல் மாற்றிக் காட்டி இன்னும் மோசமான அர்த்தத்தை அது தெரிந்துகொள்ளக்கூடும். அந்த சைகைக்கு விளக்கும் சொல்பவரால் குழந்தை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாகத் துன்புறத்தப்படலாம் எனும் ஆபத்து இருப்பதைத் தயவுசெய்து உணருங்கள். மறந்தும்கூட மோசமான சைகையை வெளிப்படுத்தாதீர்கள்.

மற்றவரோடு ஒப்பிடாதீர்: இது கண்டிக்கும்போது மட்டுமல்ல, பாராட்டும்போதும்கூட பக்கத்து வீட்டுக் குழந்தையுடனோ, உறவினர் வீட்டு குழந்தையுடனோ ஒப்பிட்டு குறை சொல்வீர்கள்.

இதன் பாதிப்பு ரொம்பவே அதிகம். முதல் விஷயம். நீங்கள் யாரோடு ஒப்பிடுகிறீர்களோ அந்தக் குழந்தையை உங்கள் குழந்தைக்குப் பிடிக்காமல் போய்விடும். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தை எனில், நல்ல நட்பை இழந்துவிடும்.

குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம்  செய்துவிடாதீர்கள்

பின், தன்னைப் பற்றிய தாழ்வுமனப்பாண்மை மிகச் சின்ன வயதிலேயே உங்கள் குழந்தைக்கு வந்துவிடும். இன்னொரு கோணமும் இருக்கிறது. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் குணமும் உங்கள் குழந்தைக்கு வந்துவிடும். அதன் பாதிப்புகள் உங்களுக்கும் குடும்பத்திற்கும் அதிகமாகி விடும்.

செத்து போ / தொலைந்து போ : மிகச் சாதாரணமாக இந்தச் சொற்களை குழந்தைகளைப் பார்த்து சில பெற்றோர்கள் சொல்லிவிடுகிறார்கள். அடிக்கடி இதைக் கேட்கும் குழந்தைகளே வீட்டை விட்டு ஓடிச் செல்லும் முடிவினை எடுக்கிறார்கள். வெளியே சென்று எங்கே போவது என்ன செய்வது என ஒன்றும் புரியாமல் தவறான மனிதர்களிடம் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம்  செய்துவிடாதீர்கள்

இன்னும் சில குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வதும், அதில் சில குழந்தைகளுக்கு பக்க விளைவுகளால் உடல் உறுப்புகள் செயலழிப்பதும் நடந்துவிடும். அதனால், வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து இவற்றைச் சொல்லிவிடாதீர்கள். இதன் விளைவுகள் பேரழிவை உங்களுக்குக் கொடுத்து விடும்.

என் பொண்ணே / பையனே இல்ல: மேலே சொன்னது போலத்தான் இவையும். சற்று யோசித்துப் பாருங்கள். இது எவ்வளவு மோசமான, தவறான அர்த்தம் கொண்ட வார்த்தைகள். இதற்கு அர்த்தம் தெரியாத வரை திட்டுகிறீர்கள் என நினைத்துக்கொண்டிருப்பார்கள் குழந்தைகள்.

குழந்தைகளைக் கண்டிக்கும்போது மறந்தும்கூட இதெல்லாம்  செய்துவிடாதீர்கள்

சற்று வளர்ந்த பின்பும் இதையே சொல்லித் திட்டினால் உங்களை என்னவாக நினைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்த வார்த்தைகள் குழந்தைகளையா குறிக்கின்றன… உங்களை அல்லது உங்கள் இணையைத்தானே குறிப்பிடுகின்றன. அதனால், வார்த்தைகளை மிகக் கவனமாகப் பயன்படுத்துங்கள்.