தாலி கயிறு மாற்றும்போது இதை மறக்காதீங்க..!?

 

தாலி கயிறு மாற்றும்போது இதை மறக்காதீங்க..!?

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியவர்கள் சிறுவர்களை வாழ்த்துவது நம் மரபு. பதினாறு பெற்று என்பது பதினாறு குழந்தைகள் அல்ல. பதினாறு வகையான செல்வங்களான, நோயில்லாத உடல், சிறப்பான கல்வி, குறைவில்லாத தானியம், தீமை இன்றி பெறும் செல்வம், அற்புதமான அழகு, அழியாத புகழ், என்றும் இளமை, நுட்பமான அறிவு, குழந்தைச் செல்வம், வலிமையான உடல், நீண்ட ஆயுள், எடுத்தக் காரியத்தில் வெற்றி, சிறப்பு மிக்க

தாலி கயிறு மாற்றும்போது இதை மறக்காதீங்க..!?

பெருமை, நல்ல விதி, துணிவு, சிறப்பான அனுபவம் இந்த தாத்பர்யத்தை விளக்கும் விதமாக திருமண பந்தத்தின் அடையாளமாக திகழும் திருமாங்கல்யத்தை 16 திரிகளை கொண்ட கயிற்றில் அணிவது மரபு.
திருமாங்கல்யத்தை அணிந்திருக்கும் தாலிக்கயிறு மங்கியவுடன், அதற்கு மாற்றாக புதிய கயிறு அணிந்துகொள்ளுவது வழக்கம். திருமாங்கல்ய தாலிகயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவது நல்லது. பெண்கள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து, பூஜை அறையில் விளக்கேற்றி, கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, கழுத்தில் உள்ள பழைய

தாலி கயிறு மாற்றும்போது இதை மறக்காதீங்க..!?

தாலிக்கயிற்றை கழட்டாமல், முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து, அதில் உள்ள குண்டுகளை மட்டும் எடுத்து, புது தாலி கயிற்றில் கோர்த்து, அதனை கழுத்தில் போட்ட பின்பு தான், பழைய கயிற்றை கழுத்திலிருந்து எடுக்க வேண்டும். கழட்டிய பழைய கயிற்றை உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளிலோ அல்லது கடலிலோ விட்டு விடுங்கள். திருமாங்கல்யத்தில் அனைத்து குண்டுகளையும் கோர்த்து விட்ட பின்பு, நீங்கள் இடும் முடிச்சானது இடது நெஞ்சு பக்கத்தில் தான் இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள் நீரை கரைத்து வைத்துக் கொண்டு உங்கள் கழுத்தில் கட்டிய திருமாங்கல்யக் குண்டுகளை ஒற்றைபடையில் ஏழு அல்லது ஒன்பது முறை அதில் தோய்த்து

தாலி கயிறு மாற்றும்போது இதை மறக்காதீங்க..!?

எடுக்கவேண்டும். அதன் பின்பு பூஜை அறையில் உள்ள குல தெய்வத்தையும், அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு உங்கள் திருமாங்கல்யத்திற்கு குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பொட்டை வைத்துக் கொள்ளும் போது, இந்த சுலோகத்தை சொல்லிக் கொண்டே வைப்பது கணவன் தீர்க்க ஆயுளுடன் இருப்பார். அதோடு குடும்பத்தில் மேலும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பேறு, குழந்தைகளால் நற்பெயரும் கிடைக்கும். ஸ்லோகம் தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸ்ஹாரித்ரம் தராம்யஹம் பர்த்து ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸீ ப்ரீதா பவ ஸர்வதா

தாலி கயிறு மாற்றும்போது இதை மறக்காதீங்க..!?

பதி வ்ரதே மஹா பாகே பர்த்துஸ்ச ப்ரியவாதினீ
அவைதயம் ச செளபாக்யம் தேஹி த்வம் மம ஸுவர்தே ஸெளபாக்யம் ஸெளமாங்கல்யம் ச தேஹிமே திருமாங்கல்ய கயிற்றை மாற்றியதினத்தன்று மாலை வேளையில் குடும்பத்தோடு ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது ரொம்ப நல்லது. கர்பிணி பெண்கள் மாங்கல்யத்தை மாற்றக் கூடாது குறிப்பிடத்தக்கது.

  • வித்யா ராஜா