இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டாம் – எம்.ஜி.ஆர் செய்த பகீர் பிரச்சாரம் #ttnflashback

 

இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டாம் – எம்.ஜி.ஆர் செய்த பகீர் பிரச்சாரம் #ttnflashback

கூட்டணியாவது, தொகுதிப் பங்கீடாவது அதையெல்லாம் இவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. யார் வேட்பாளர் என்பதையும் இவர்கள் கவனிப்பதே இல்லை. இரட்டை இலையில் குத்திவிட்டு வந்துவிடுவேன், உதயசூரியனில் குத்திவிட்டு வந்துவிடுவேன் என்று சொல்பவர்கள் அதிகம்.

இப்படிப்பட்டவர்களை நம்பித்தான் அதிமுகவும், திமுகவும் ரேசில் ஓடிக் கொண்டிருக்கின்றன. சின்னம்தான் முக்கியம். இந்த இரு கட்சிகளுக்கு மட்டுமல்ல. எல்லா கட்சிகளுக்குமே சின்னம்தான் முக்கியமானதாக இருக்கிறது. அதனால்தான் சின்னம் நழுவிப்போகாமல் இருக்க இத்தனை பாடுபடுகிறார்கள்.

இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டாம் – எம்.ஜி.ஆர் செய்த பகீர் பிரச்சாரம் #ttnflashback

மக்கள் மனதில் ஒரு சின்னம் பதிவாவது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், பதிவாகிவிட்டால் அந்த தலைவனே நினைத்தாலும் வேறு சின்னத்திற்கு ஓட்டு போடச்சொன்னாலும் கேட்கமாட்டார்கள். சின்னத்திற்கு அந்த அளவுக்கு உயிர் இருக்கிறது. அதற்கு உதாரணம். 77ல் நடந்த தேர்தலும் தாராபுரம் தொகுதியில் நடந்த சம்பவமும்தான்.

1977ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்தான் தமிழக சட்டமன்றத்திற்கு 6வது முறையாக நடந்த தேர்தல். எம்.ஜி.ஆரை முதல்வராக்கிய தேர்தல். அருப்புக்கோட்டையில் போட்டியிட்டு வென்றார் எம்.ஜி.ஆர்.

இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டாம் – எம்.ஜி.ஆர் செய்த பகீர் பிரச்சாரம் #ttnflashback

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அதிமுக கட்சியை தொடங்கி, திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல், 74ல் கோவை மேற்கு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றதால் அதிமுகவுக்கு இரட்டை இலைசின்னம் அடையாளமாகிவிட்டது.

’இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று அந்த தேர்தலில் தமிழகம் முழவதும் சுற்றி சூறாவளி பிரச்சாரம் செய்து வந்த எம்.ஜி.ஆர்., ஒரெ ஒரு தொகுதியில் மட்டும், ‘’இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள்’’ என்று கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்படியானால் என்ன சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்? ‘’சிங்கம் சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள்’’ என்று பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டாம் – எம்.ஜி.ஆர் செய்த பகீர் பிரச்சாரம் #ttnflashback

திருப்பூர் மாவட்டம் தாராரம் தொகுதியில்தான் இந்த பரபரப்பு நிகழ்ந்தது. அலங்கியம் பாலகிருஷ்ணன் எனும் வேட்பாளருக்குத்தான் சிங்கம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எம்.ஜி.ஆர்.

அதிமுகவுக்கு முதலில் சிங்கம் சின்னத்தை பெறவே விரும்பினார் எம்.ஜி.ஆர். ஆனால், அது கிடைக்காமல் இரட்டை இலை கிடைத்தது.

தாராபுரம் தொகுதியில் முதலில் அய்யாசாமி என்பவரை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு விட்டதால், அவர் கட்சி தலைமை அனுப்பிய பார்ம் a, பார்ம் -b ஐ வைத்து வேட்புமனுவினையும் தாக்கல் செய்துவிட்டார். ஆனால், தலைமை நடத்திய அவசர ஆலோசனையில் தாராபுரம் வேட்பாளரை மாற்றிவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதனால், அய்யாசாமிக்கு பதிலாக அலங்கியம் பாலகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தார் எம்.ஜி.ஆர். தலைமையின் திடீர் முடிவினை ஏற்க மறுத்த அய்யாசாமி, வேட்புமனுவை வாபஸ் வாங்க மறுத்து, போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிடுவதால் அவர் இரட்டை இலையில் நின்றார். இதனால் வேறு வழியின்றி அலங்கியம் பாலகிருஷ்ணனை சிங்கம் சின்னத்தில் தனியாக போட்டியிட வைத்து, அவருக்கு மட்டும் பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர்.

என்னதான், எம்.ஜி.ஆரே சென்று, ‘’இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம். சிங்கம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’’என்று தீவிர பிரச்சாரம் செய்தாலும், இரட்டை இலைக்கே குத்தினார்கள். சிங்கம் தோற்றது.