darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



பொணத்தை எரிச்சாதான் குழந்தைக்கு பாலும், உனக்கு சோரும் கிடைக்கும் ! மிரட்டிய முன்னாள் கவுன்சிலர் !

மாதிரி படம்
மாதிரி படம்

சடலங்களை எரிக்கும் பணி செய்யாவிடில் ஊரை விட்டு ஒதுக்குவோம் என மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர்  பட்டியலினத்தைச் சேர்ந்தவர். கட்டிட வேலை செய்து வரும் பாலச்சந்திரன் தன்னுடைய மூதாதையர் நிலத்தில் வசித்து வருகிறார். அந்த இடத்தில் கழிப்பிடம் கட்ட முயற்சி செய்தபோது, கலைச்செல்வன் என்பவர் அவரை அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. 

work

பின்னர் கலைச்செல்வனுடன் சேர்ந்து மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் சிவமணி சுப்பிரமணி, நடராஜன் உள்ளிட்ட 20 பேர் வாகனங்களில் வந்து அவரை மிரட்டிச் சென்றுள்ளனர். அதாவது பாலச்சந்திரனின் மூதாதையைர் செய்த வேலையான மயானத்தில் சடலங்கள் எரிக்கும் வேலையை செய்யவேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

threat

அப்படி மேற்கொள்ளாவிட்டால் அந்த நிலத்தில் தங்கக்கூடாது என்றும் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். சொல்வதை கேட்காவிட்டால் ஊருக்குள் வந்து எந்த அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் அனுமதிக்கமாட்டோம் என்றும் குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஏற்கனவே பாலச்சந்திரன் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருந்ததால் பயந்து போன பாலச்சந்திரன் திருச்சி ஐஜியிடம் புகார் அளித்துள்ளார். அதில் தன்னையும் தங்கள் குடும்பத்தையும் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

dig

இவரின் மனுவைப் பெற்றுக் கொண்ட திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி அமல்ராஜ உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

2018 TopTamilNews. All rights reserved.