“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” – அப்படியே பிளேட்டை திருப்பி போட்ட அண்ணாமலை!

 

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” – அப்படியே பிளேட்டை திருப்பி போட்ட அண்ணாமலை!

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்தித்து அணை கட்டாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் எடியூரப்பாவோ நாங்கள் கட்டியே தீருவோம் என்கிறார்.

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” – அப்படியே பிளேட்டை திருப்பி போட்ட அண்ணாமலை!

கர்நாடகாவில் ஆளும் பாஜகவே மத்திய அரசாகவும் உள்ளதால் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறார். அணை கட்டுவதற்கான செயல்திட்டங்களை உருவாக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. தற்போது புதிய மாநில தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை இதுதொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” – அப்படியே பிளேட்டை திருப்பி போட்ட அண்ணாமலை!

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி சுமுக நிலையில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும்” என்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, “தமிழன் என்று சொல்வதில் எனக்கு பெருமை இல்லை.

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” – அப்படியே பிளேட்டை திருப்பி போட்ட அண்ணாமலை!

நான் சுத்தமான கன்னடியன். நான் கன்னட மொழி பேசக் கூடியவன். கன்னட மண்ணுக்கு சொந்தக்காரன் என்று சொல்வதுதான் எனக்கு பெருமை. மண்ணுலகில் வாழும் வரை கன்னட மண்ணுக்கு மட்டும் தான் நான் விசுவாசமாக இருப்பேன். காவிரி தண்ணீர் பிரச்சனையில் கன்னட மக்களோடு நின்று நானும் தமிழகத்திற்கு தண்ணீர் விட அனுமதிக்கமாட்டேன். உங்களோடு நின்று காவிரி பிரச்சினைக்காக போராடுவேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.