கருத்துக்கணிப்பால் பயமா? புள்ளிவிவரத்துடன் தில்லாக பேசும் குஷ்பு

 

கருத்துக்கணிப்பால் பயமா? புள்ளிவிவரத்துடன் தில்லாக பேசும் குஷ்பு

ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு கருத்துக்கணிப்பு குறித்து கவலையில்லை என்று கூறியுள்ளார்.

கருத்துக்கணிப்பால் பயமா? புள்ளிவிவரத்துடன் தில்லாக பேசும் குஷ்பு

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக வேட்பாளராக உள்ள குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்காக அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக கோட்டை என்று கூறிவரும் நிலையில் அங்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். திமுக சார்பில் மருத்துவர் எழிலன் போட்டியிடவுள்ள நிலையில் அங்கு தனக்கான வரவேற்பு மகத்தானதாக உள்ளது. அதனால் நிச்சயம் ஆயிரம் விளக்கில் வெற்றிபெறுவேன் என்று குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு ஆதரவாக அவரது கணவர் சுந்தர் சி களமிறங்கியுள்ளார்.இருப்பினும் கடந்த சில நாட்களாக தேர்தல் குறித்த தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் தேர்தல் கருத்து கணிப்பில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்று முடிவு வெளியாகியுள்ளது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கணிப்பால் பயமா? புள்ளிவிவரத்துடன் தில்லாக பேசும் குஷ்பு

இந்நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து நடிகையும் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான குஷ்பு கூறும் போது, ” 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமையாது என்று கூறினார்கள். ஆனால் ஜெயலலிதா அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். அதேபோல் 2019 இல் வெளியான கருத்துக்கணிப்பில் மோடி மத்தியில் ஆட்சியை பிடிக்கமாட்டார்கள் என்று கருத்துக்கணிப்பு வந்தது.ஆனால் மோடி மீண்டும் ஆட்சியை பிடித்து பிரதமரானார். அதனால் இந்த கருத்துக்கணிப்பையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆயிரம் விளக்கு தொகுதிக்கு என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அமித்ஷா, முதல்வர் பழனிசாமி ஆகியோர் விரைவில் வருவார்கள்” என்றார்.