2 ஆண்டுகளில் ஜோ பைடன் பெற்ற நன்கொடை 1 பில்லியன் டாலர்!

 

2 ஆண்டுகளில் ஜோ பைடன் பெற்ற நன்கொடை 1 பில்லியன் டாலர்!

அமெரிக்காவில் நாளை (நவம்பர் 3) அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனால், கடந்த ஏழெட்டு மாதங்களாக பிரசாரத்தில் அனல் பறந்துவருகிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.

ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

2 ஆண்டுகளில் ஜோ பைடன் பெற்ற நன்கொடை 1 பில்லியன் டாலர்!

ஒன்றாக உட்கார்ந்து உணவருந்த கட்டணம் போன்ற பல வழிகளில் அதிபர் வேட்பாளர்கள் நிதி திரட்டுவது வாடிக்கையான ஒன்றுதான். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கடந்த 2 ஆண்டுகளில் திரட்டிய நன்கொடை சுமார் 1 பில்லியன் டாலர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமிளா ஜெயபால் ஜோ பைடனுக்கு நிதி அளித்தவர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் சுதேஷ் சாட்டர்கி, அஜய் ஜெயின், நரசிம்மன் என அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் ஜோ பைடனுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளனர்.

2 ஆண்டுகளில் ஜோ பைடன் பெற்ற நன்கொடை 1 பில்லியன் டாலர்!

ட்ரம்ப்க்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வருவது ஜோ பைடன்தான். அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே நடைபெற்ற சர்வேயில் பைடனுக்கே அதிக ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜோ பைடன் வெல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அல்லது ட்ரம்ப் வெல்ல பெரும் நெருக்கடியைத் தருமளவு வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.