ரஷ்யா கண்டுபிடித்தது தடுப்பூசியா ?கடுப்பூசியா ?-ட்ரம்பை கடுப்பேத்த ரஷ்யா அவசரமாக கொரானா தடுப்பூசியை வெளியிட்டுள்ளதாம் .

 

ரஷ்யா கண்டுபிடித்தது தடுப்பூசியா ?கடுப்பூசியா ?-ட்ரம்பை கடுப்பேத்த ரஷ்யா அவசரமாக கொரானா தடுப்பூசியை வெளியிட்டுள்ளதாம்   .

உலக நாடுகள் எல்லாம் இப்போது கொரானாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலையில் முழுமூச்சாக இறங்கியிருக்கும் நேரத்தில் .திடீரென்று உலக சுகாதார மையத்தின் ஒப்புதல் கூட பெறாமல் அவசரமாக ரஷ்யா கொரானா தடுப்பூசியை வெளியிட்டுள்ளது .அந்த ஊசியை தன்னுடைய மகளுக்கு செலுத்தி சோதனையும் செய்துள்ளார் .

ரஷ்யா கண்டுபிடித்தது தடுப்பூசியா ?கடுப்பூசியா ?-ட்ரம்பை கடுப்பேத்த ரஷ்யா அவசரமாக கொரானா தடுப்பூசியை வெளியிட்டுள்ளதாம்   .
ரஷ்யா வெளியிட்ட இந்த தடுப்பூசியை பற்றி பல கருத்துக்கள் உலா வருகின்றன.அதாவது தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விஞ்ஞானிகளை தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், அவருக்கு முன்னாடியே தாங்கள் அதை வெளியிட வேண்டும் என்று ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று கூறுகின்றனர் .எப்போதுமே அமெரிக்காவோடு எல்லா விஷயத்திலும் போட்டி போடும் ரஷ்யா இந்த விஷயத்தில் முந்திக்கொண்டது ட்ரம்பை கடுப்பேத்தியுள்ளது .ஏனென்றால் இப்போது அமெரிக்காவில் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்குள் ட்ரம்ப் இந்த கொரானா தடுப்பூசியை கணடுபிடித்து ,அதை வைத்து நிறைய வோட்டுக்களை பெறலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தார் .ஏனெனில் உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் .இது டிரம்புக்கு அமெரிக்க மக்களிடையே அவரின் செல்வாக்கை குறைத்துள்ளது .இதனால் இந்த தடுப்பூசி விஷயத்தில் ரஷ்யா முந்திகொண்டுள்ளது மேலும் ட்ரம்பை கடுப்பேத்தியுள்ளது என்று பலர் கூறுகின்றனர் .மேலும் புதின் கண்டுபிடித்த இந்த ஊசி எந்தளவுக்கு பலனளிக்கும் என்று புதிராக உள்ளது.