டொனால்டு ட்ரம்ப் vs ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி – புதிய விதிகள்

 

டொனால்டு ட்ரம்ப் vs ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி – புதிய விதிகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம் எதிர்த்து போட்டியிடும் ஜோ பைடனுடன் விவாதிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

டொனால்டு ட்ரம்ப் vs ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி – புதிய விதிகள்

அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கமான ஒன்று. அதிபர் ட்ரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேராக விவாதிக்கும் சென்ற மாதம் 29-ம் தேதி நடந்தது.

ட்ரம்ப் – ஜோ பைடன் மீண்டும் இம்மாதம் 15-ம் தேதி நேரில் விவாதிக்கும்படியாக நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டிருந்தது. ஆனால், ட்ரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதியாக சிசிக்சையில் எடுத்துக்கொண்டதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜோ பைடன் சில நிபந்தனைகளை விதித்தார். அதை ட்ரம்ப் தரப்பில் ஏற்கபடாமல் போகவே, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

டொனால்டு ட்ரம்ப் vs ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி – புதிய விதிகள்

இந்நிலையில் அடுத்த விவாத நிகழ்ச்சி 22-ம் நாள் நடைபெற உள்ளது. இதில் புதிய விதிகளாக, இருவரும் தங்கள் கருத்துகளை தடையில்லாமல் பேசுவதற்காக முதல் இரண்டு நிமிடங்கள் பேசுபவரின் மைக் மட்டுமே ஆன் செய்யப்பட்டிருக்கும். அடுத்தவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். அடுத்த பகுதியில் இருவரின் மைக்குகளும் ஆன் செய்யப்பட்டிருக்கும். இந்த புதிய விதிகளை இருதரப்பிலும் ஏற்பதில் சில தயக்கங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.