பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

மகளிருக்கான போட்டியில் ஜப்பானின் ஒசாகா அசத்தலான வெற்றியைப் பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றார். இரண்டாம் முறையாக ஒசாகா அமெரிக்க ஓபன் கோப்பையை வென்றிருக்கிறார்.

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

ஆண்களுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியமும், ஜெர்மனிய வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வேராவும் மோதினர்.

இருவரும் முதன்மையான வீரர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்தளவு பரபரப்பு இருக்கும் என நினைத்தது இல்லை.

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

ஐந்து செட் உள்ள போட்டியில் முதல் செட் ஆட்டத்தில் ஜெர்மானிய வீரர் ஸ்வேரா 6: 2 எனும் கணக்கில் எளிதாக வென்றார். இரண்டாம் செட்டில் 6 : 4 எனும் கணக்கில் சற்று சிரமப்பட்டு வென்றார் ஸ்வேரா.

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

இதுவரையிலான ஆட்டத்தின்படி ஜெர்மானிய வீரர் ஸ்வேராவே பட்டம் வெல்வார் என்று கணித்தார்கள். ஆனால், மூன்றாம் செட்டில் 6: 4 எனும் கணக்கில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியரிம் வென்றார்.

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

அதற்கு அடுத்த நான்காம் செட்டிலும் 6 : 3 எனும் கணக்கில் மீண்டும் டொமினிக்கே வென்றார்.

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

இதனால், 5 –ம் செட் விறுவிறுப்பாகச் சென்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை த்ரில் தொடர்ந்துகொண்டே இருந்தது.

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

இறுதியாக 7: 6 எனும் கணக்கில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் வென்றார்.

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தியம்

இதன்மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார் டொமினிக் தியம்.