குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் குறித்து, தேனி மாவட்ட போலீசாருக்கு பயிற்சி முகாம்

குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் குறித்து, தேனி மாவட்ட போலீசாருக்கு பயிற்சி முகாம்

தேனி

தேனி மாவட்டம் வீரபாண்டியில் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் 2005 குறித்து, காவல்துறையினருக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை மற்றும் ஆரோக்கிய அகம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த முகாமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் குறித்து, தேனி மாவட்ட போலீசாருக்கு பயிற்சி முகாம்

தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் பேசிய அவர், காவல்துறையினர் குற்றச்சம்பங்கள் நடைபெறும் இடத்திற்கு தகவல் வந்தவுடன் உடனேசென்று பார்க்க வேண்டும் என்றும், அவ்வாறு சென்று பார்த்தால் தான் குற்றவாளிகள் தவறு செய்வதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், ஈவ்டீசிங் செய்வோருக்கு உரிய தண்டனை சட்ட ரீதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் குறித்து, தேனி மாவட்ட போலீசாருக்கு பயிற்சி முகாம்

இந்த கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதில் காவல்துறையினரின் பங்களிப்பு குறித்தும், போக்சோ சட்டத்தின் படி பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், சங்கரன், ஆரோக்கிய அகம் இயக்குனர் முனைவர்.சாபு மில்டன் சைமன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வி பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.