மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்- மத்திய அரசு அறிவிப்பு

 

மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்- மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. பேருந்து ரயில் மற்றும் விமானம் உள்பட அனைத்து விதமான போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மே.31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் பகுதியளவு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ரயில் போக்குவரத்து மே. 31 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

flightமே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்- மத்திய அரசு அறிவிப்புஇந்நிலையில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின்னரே முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.
அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவுறுத்தியுள்ளார்