லாக்டவுன் தளர்வால் மீண்டும் பறக்க தொடங்கிய பயணிகள்.. 28 லட்சம் பேருடன் பறந்த விமானங்கள்

லாக்டவுன் தளர்வால் மீண்டும் பறக்க தொடங்கிய பயணிகள்.. 28 லட்சம் பேருடன் பறந்த விமானங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானங்கள் 28.32 லட்சம் பயணிகளை சுமந்து சென்றுள்ளன. இது அதற்கு முந்தைய மாதமான ஜூலையை காட்டிலும் 34.4 சதவீதம் அதிகமாகும்.

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக 2 மாதங்களாக விமானங்கள் விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கடந்த மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் மக்கள் மீண்டும் விமான பயணத்தில் பயணிக்க தொடங்கின. இதற்கிடையே லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டதால் விமானங்களில் பயணிகள் செல்வது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

லாக்டவுன் தளர்வால் மீண்டும் பறக்க தொடங்கிய பயணிகள்.. 28 லட்சம் பேருடன் பறந்த விமானங்கள்
தனியார் விமானங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் மொத்தம் 28.32 லட்சம் பயணிகளுக்கு சேவை வழங்கியுள்ளன. முந்தைய ஜூலை மாதத்தில் 21.07 லட்சம் பயணிகள் மட்டுமே விமானங்களில் பயணம் செய்து இருந்தனர். ஆக கடந்த மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை 34.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் 2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிட்டால் இது மிகவும் குறைவாகும்.

லாக்டவுன் தளர்வால் மீண்டும் பறக்க தொடங்கிய பயணிகள்.. 28 லட்சம் பேருடன் பறந்த விமானங்கள்
விமான நிலையம்

2019 ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.18 கோடி பேர் பயணம் செய்து இருந்தனர். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 8 மாதங்களில் 4.01 கோடி பயணிகள் விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர். இது 2019 ஜனவரி-ஆகஸ்ட் காலத்தை காட்டிலும் 57.48 சதவீதம் குறைவாகும். சென்ற ஆண்டின் முதல் 9 மாதங்களில் 9.43 கோடி பேர் விமான சேவையை பயன்படுத்தி இருந்தனர்.