Home இந்தியா கொரோனா தொற்றை அதிவேகமாக கண்டறியும் நாய்கள்… மருத்துவ சோதனைகளை பீட் செய்யும் துல்லியம்!

கொரோனா தொற்றை அதிவேகமாக கண்டறியும் நாய்கள்… மருத்துவ சோதனைகளை பீட் செய்யும் துல்லியம்!

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்று. அதனால் தான் ராணுவத்திலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் நாய்கள் பெரும் பங்குவகிக்கின்றன. இது ராணுவ நாய்கள். நம்ம வீட்டு நாய்கள் வேறு டிபார்ட்மெண்ட். எங்கே என்ன இருக்கிறது என்பதை வாசனையை வைத்தே கண்டுபிடித்து விடும். ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்தால் மோப்பம் பிடித்து நம்மையே சுற்றிவரும்.

Dogs Can Detect COVID-19 More Accurately Than Tests: Research

நாய்களால் சாப்பாட்டை மட்டுமல்ல அதை விட வேகமாக கொரோனா தொற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எந்த அளவு வேகமென்றால் தற்போது நடைமுறையிலிருக்கு ஆர்டிபிசிஆர் சோதனையில் முடிவுகள் வெளியாகும் நேரத்தை விட அதிவேகமானதாம். இந்த விஷயத்தில் மருத்துவ சோதனைகள் ஸ்லோ டிரெய்ன் என்றால், நாய்கள் புல்லட் டிரெய்னாம். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் நாய்களைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கின்றனர்.

Image result for sniff dog

ஆய்வாளர்களில் ஒருவரான டாமி டிக்கி, “ஏற்கனவே நாய்களால் கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. ஆனால், அவை அதி விரைவாகவும் மிக துல்லியமாகவும் கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க முடியும் என எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாங்கள் பரிசோதித்த ஒரு நாய் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறிந்தது. நாங்கள் நம்பவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்த இரு நபர்களும் கொரோனா தொற்றோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்றார்.

Image result for sniff dog

நாய்களின் மூளையில் மூன்றில் ஒரு பங்கு வாசனையை நுகர்வதற்காகவே இருக்கின்றன. 125-300 மில்லியன் ஆல்ஃபாக்டரி செல்கள் அதற்குத் துணைபுரிகின்றன. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இருப்பதை உணர்த்தும் கரிமச் சேர்மங்களை நுகரும் திறனைப் பெற்றுள்ளன. வைரஸுக்கென்று தனியாக வாசனை இல்லாத போதிலும், அதனால் ஒரு மனிதனுக்கு உண்டாகும் மாற்றத்தை வைத்து நாய்கள் கண்டுபிடிக்கின்றன.

Image result for sniff dog

எப்படியென்றால் வைரஸால் வியர்வைச் சுரப்பிகள், சிறுநீர் ஆகியவற்றில் வெளியேற்றப்படும் பொருள்களின் மூலம் நாய்கள் மோப்பம் பிடித்து கொரோனா தொற்றை உறுதிசெய்கின்றன. இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர். மொத்தமாக 18 நாய்களை நான்கு நாட்கள் பயிற்சிக்குட்படுத்தி ஆய்வில் ஈடுபடுத்தியதில், 83-100 சதவிகிதம் துல்லியமான முடிவை அவை காட்டியதாகவும் தெரிவிக்கிறார்கள்.

Image result for sniff dog

இதேபோல ஜெர்மனியிலும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எட்டு மோப்ப நாய்களைக் கொண்டு 1,012 பேரின் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்துள்ளனர். அதில் சராசரியாக 94 சதவிகிதம் அளவுக்குத் துல்லியமாகக் கணித்துள்ளன. 67.9%-95.2% பாசிட்டிவ் முடிவுகளையும் 92.4%-98.9% நெகட்டிவ் முடிவுகளையும் மிக துல்லியமாக உணர்த்தியிருக்கின்றன.

Image result for sniff dog indian military

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு ராணுவ நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுவருகிறது. இந்திய ராணுவத்தில் தமிழகத்தின் சிப்பிப்பாறை நாய்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல்! இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்

அதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்

ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...

மதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி!

மதுரை மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி...

கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க, இதை குடிங்க போதும்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கால கட்டத்தில், நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கடைபிடித்து...
TopTamilNews