பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கித் தவித்த நாய்… காப்பற்றிய விலங்கு நல ஆர்வலர்கள்!

பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கித் தவித்த நாய்… காப்பற்றிய விலங்கு நல ஆர்வலர்கள்!

பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கி தவித்து வந்த நாயை விலங்கு நல ஆர்வலர்கள் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கித் தவித்த நாய்… காப்பற்றிய விலங்கு நல ஆர்வலர்கள்!

மதுரை மாநகரில் பிளாஸ்டிக் குடத்திற்குள் தலைமாட்டிய நிலையில் உயிருக்கு போராடி வந்த நாய் ஒன்றை விலங்கு நல ஆர்வலர்கள் பொதுமக்கள் உதவியுடன் மீட்டுள்ளனர். மதுரையில் ஆரப்பாளையம் ,அவனியாபுரம் , திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. இவைகள் வீட்டு வாசலில் வைக்கப்படும் தண்ணீர் குடங்களில் உள்ள தண்ணீரை குடிக்க முயன்று சில சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றன. அந்த வகையில் ஆரப்பாளையம் பகுதியில் தெரு நாய் ஒன்று பிளாஸ்டிக் குடத்திற்குள் உள்ள தண்ணீரை குடிக்க முயன்று அதன் தலை குடத்திற்குள் சிக்கியுள்ளது.

பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கித் தவித்த நாய்… காப்பற்றிய விலங்கு நல ஆர்வலர்கள்!

இதை கண்ட பொதுமக்கள் குடத்தை பாதியாக அறுத்து நாயை மீட்க முயன்றனர். ஆனால் நாயின் வாய்ப்பகுதிமற்றும் கழுத்துப் பகுதியில் வலையில் சிக்கியதால் நாய் அங்கும் இங்கும் ஓடியது. இதனால் இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த விலங்கு நல ஆர்வலர்கள் நாய் வலையை பயன்படுத்தி அதை பிடித்து உரிய பாதுகாப்பு வசதிகளுடன் குடத்தை அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் ,மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.