• December
    15
    Sunday

Main Area

Main



எஸ்.ஐ வீட்டிற்குள் புகுந்த பாம்பைக் கடித்துக் கொன்ற செல்லப் பிராணி !

Dod
Dod

திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ பெருமாள். இவர் வீட்டில் முனி என்ற நாயை வளர்த்து வந்துள்ளார். அவர் அந்த நாயைக் குல தெய்வமாகவும் போற்றி வருகிறாராம்.

dog

நேற்று மாலை, அவரும் அவர் மனைவியும் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்துள்ளனர். அவரின் மகள் மட்டும் வீட்டின் உள்ளே இருந்துள்ளார். அப்போது, அவர் வீட்டினுள் நுழைந்த 6 அடி பாம்பைக் கண்டு பெருமாளின் மகள் கத்தியுள்ளார். அதனைக் கேட்ட அந்த நாய், உடனே அங்குச் சென்று அந்த பாம்பின் தலையைக் கவ்வியுள்ளது. 

dog

மகளின் சத்தம் கேட்டு பெருமாள் செல்வதற்குள் அந்த நாய் அங்கே சென்று அந்த பாம்பிடம் சண்டையிட்டுக் கொண்டுள்ளது. அந்த பாம்பைத் தலையில் கடித்த நாய், பாம்பின் தலையைக் கவ்வி வீசியுள்ளது. அதனால், அந்த பாம்பு அங்கேயே இறந்துள்ளது. இதனைக் கண்ட பெருமாள், அந்த நாயின் விசுவாசத்தைக் கண்டு திகைத்து நின்றுள்ளார். அதன் பிறகு, அவர் வீட்டினுள் நுழைந்த அந்த பாம்பு சாரை பாம்பு என்று தெரியவந்துள்ளது. முனி என்ற அந்த செல்ல பிராணி செய்த செயல் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாய் நன்றியுள்ள ஜீவன் என்பதை இந்த முனி நிரூபித்துவிட்டது

2018 TopTamilNews. All rights reserved.