• April
    05
    Sunday

Main Area

Main



வாரம் தோறும் பஜனையில் கலந்து கொண்டு பாடும் அதிசய நாய்!

dog-sings
dog-sings

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டம் முல்ஷி வட்டத்தில் இருக்கிறது பிராங்குட் என்கிற கிராமம்.இந்த கிராமத்தில் ஒரு தத்தாத்ரேயர் கோவில் இருக்கிறது. இந்த தத்தாத்ரேயர் மூன்று தலைகள் கொண்டவர்.அவை பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் கலந்த வடிவம் என்று புராணங்கள் சொல்கின்றன. இவருடைய நான்காவது அவதாரம்தான் ஷீரடி சத்திய சாய்பாபா என இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

பிராங்குட் கிராமத்தில் ஒரு தத்தாத்ரேயர் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு வியாழனன்றும் அந்தக் கோவிலில் பக்தர்கள் கூடி, பஜனை செய்து பாடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ஒரு வெள்ளை நிற நாய் வாரம் தவறாமல் வந்து கலந்து கொள்கிறது.பக்தர்கள் பாடும்போது அதுவும் தனது மொழியில் பாடுகிறது.கடந்த ஜனவரி 30 தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

2018 TopTamilNews. All rights reserved.