kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


உண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா? 

Loading...

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென விஜயின் பாடியுள்ள 'வெறித்தனம்' பாடல் இணையத்தில் லீக் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவி வந்தன. ஏற்கனவே சிங்கப்பெண்ணே பாடலும் லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடலும் லீக் ஆகிவிட்டதாக வெளியான செய்தி படக்குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆனால் தற்போது தான் தெரியவந்துள்ளது அந்த பாடல் லீக்க்கவில்லை என்றும், இது போன்று செய்தால் விரைவில் பாடல் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் தந்திரமாகச் செயல் பட்டுள்ளனர். அவர்கள் ஆசைப்படி விரைவில் இந்த பாடலை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.