திருமாவளவன் மதிப்பாரா? முதல்வர் ஸ்டாலின் திமுகவிலிருந்து நீக்குவாரா? பாஜக ஆவேசம்

 

திருமாவளவன் மதிப்பாரா? முதல்வர் ஸ்டாலின் திமுகவிலிருந்து நீக்குவாரா? பாஜக ஆவேசம்

நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அல்ல. தி மு க உறுப்பினர். விசிகவின் வேட்பாளர் திமுகவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது” என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தான் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். ஆனால் 24/09/2021 நடைபெற்ற விசிக நிகழ்ச்சியில், அந்த கட்சியின் பொது செயலாளராக பங்கு பெற்றார்.

திருமாவளவன் மதிப்பாரா? முதல்வர் ஸ்டாலின் திமுகவிலிருந்து நீக்குவாரா? பாஜக ஆவேசம்

இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? மேலும், தாங்கள் எதை செய்தாலும் மக்கள்கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைப்பது, மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? முதல்வர் ஸ்டாலின் ரவிக்குமார் அவர்களை திமுகவிலிருந்து நீக்குவாரா? திருமாவளவன் நீதிமன்றத்தையும், மக்களையும் மதிப்பாரா? என்று கேட்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

அவர் மேலும், ரவிக்குமார் தன் பாராளுமன்ற உறுப்பினர்பதவியை ராஜினாமா செய்வாரா? தமிழக ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்புமா? பதவிக்காக பொய் சொல்லி தேர்தலில் நிற்பதும், நீதிமன்றத்தை ஏமாற்றுவதும் நியாயமா? என்று கேட்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், மதிமுகவின் கணேசமூர்த்தி, கொங்கு மக்கள் கட்சியின் சின்ன ராஜா ஆகியோர் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

திருமாவளவன் மதிப்பாரா? முதல்வர் ஸ்டாலின் திமுகவிலிருந்து நீக்குவாரா? பாஜக ஆவேசம்

இதனால் மாற்று கட்சியினர் திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரி தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது பதிலளித்த எம்பி ரவிக்குமார், தான் விசிக உறுப்பினர் இல்லை என்றும், திமுக உறுப்பினர் தான் என்றும் 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக உறுப்பினர் என்றும் அப்போது திமுக உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் பெயர் இடம் பெற்று இருந்ததாகவும் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் பூனா ஒப்பந்தம் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கில் ரவிக்குமார் பங்கேற்றுள்ளார். அதுகுறித்த அழைப்பிதழில் எம்பி ரவிக்குமார்.. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுதான் பாஜகவை கொந்தளிக்க வைத்திருக்கிறது.