இப்படி ஒரு சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆசையா? – நிறைவேறுமா?

இப்படி ஒரு சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆசையா? – நிறைவேறுமா?

ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் நான்கே நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன. வரும் சனிக்கிழமை உற்சாகமாக ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் திருவிழா தொடங்க உள்ளது.

ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது எனப் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், ஐபிஎல் வர்ணனையாளரும் முன்னள் டெல்லி கேபிட்டல் ஐபிஎல் அணியின் வீரருமான கெவின் பீட்டர்சன், ‘டெல்லி அணியே வெல்லும்’ என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இப்படி ஒரு சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆசையா? – நிறைவேறுமா?

டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் ஸ்ரேயா ஐயர். இந்த அணியில், ஷிகர் தவான், அஸ்வின், மார்கஸ் ஸ்டொனிஸ், இஷந்த் ஷர்மா, ரெஹேனா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட திறமையான வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அணியின் முக்கிய பலமான ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.

இப்படி ஒரு சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆசையா? – நிறைவேறுமா?

இந்நிலையில் டெல்லி கேப்பிடல் டீம் கேப்டன் ஒரு பேட்டியில், ‘ இந்த ஐபிஎல் போட்டியின் 14 போட்டிகளிலும் வென்று சாதனை படைக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படி ஒரு சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆசையா? – நிறைவேறுமா?

ஸ்ரேயா ஐயரின் ஆசை மிகவும் பெரிய ஆசைதான். ஏனெனில், 2008 ஆண்டு தொடங்கி இதுவரையில் நடந்திருக்கும் ஐபிஎல் போட்டித்தொடரில் ஒன்றில் கூட எந்த அணியும் இப்படி வென்றதில்லை.

2008-ல் நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப் பெற்றது.

2012-ல் நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் வீரேந்திர சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப் பெற்றது.

இப்படி ஒரு சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆசையா? – நிறைவேறுமா?

2013-ல் நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப் பெற்றது.

2014-ல் நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப் பெற்றது.

இப்படி ஒரு சாதனை படைக்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆசையா? – நிறைவேறுமா?

ஆக, இதுவரை நான்கு அணி கேப்டன்களால் 11 முறை மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் அனைத்துப் போட்டிகளிலும் வெல்வேன் என்று கூறியிருக்கிறார்.