கணக்கிடவில்லை என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்கவில்லை என்று அர்த்தமா? – மோடிக்கு ராகுல் கேள்வி

கணக்கிடவில்லை என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்கவில்லை என்று அர்த்தமா? – மோடிக்கு ராகுல் கேள்வி

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கு அரசிடம் இல்லை என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் யாருமே இல்லை என்று அர்த்தமா என்று மோடி அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கணக்கிடவில்லை என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்கவில்லை என்று அர்த்தமா? – மோடிக்கு ராகுல் கேள்வி

தினமும் மத்திய அரசை பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார் ராகுல் காந்தி. ஆனால், அவரை மத்திய அரசு சட்டை செய்வதே இல்லை. அவருடைய கேள்விக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்து வருகிறது பா.ஜ.க அரசு. இருந்தாலும் தன்னுடைய பணியை ராகுல் செய்து வருகிறார்.
மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு காலத்தில் பலியான புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கை எவ்வளவு என்று எம்.பி-க்கள் கேள்வி

கணக்கிடவில்லை என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்கவில்லை என்று அர்த்தமா? – மோடிக்கு ராகுல் கேள்வி

எழுப்பியிருந்தனர். இதற்கு மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்திருந்தார், அதில், புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்கிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இந்தியில் ட்வீட் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மோடி அரசாங்கத்துக்கு ஊரடங்கு காரணமாக எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள், எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்பது தெரியாது.

கணக்கிடவில்லை என்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்கவில்லை என்று அர்த்தமா? – மோடிக்கு ராகுல் கேள்வி

நீங்கள் கணக்கிடவில்லை என்பதால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அர்த்தம் ஆகிவிடுமா? இந்த உலகமே புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்பைப் பார்த்தது. ஆனால் மோடி அரசாங்கம் மட்டும் அதை பதிவு செய்யாமல் விட்டது. ஆம், இந்த அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை என்பது வருத்தமான உண்மை” என்று கூறியுள்ளார்.